கடவுள் ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

SHARE

கடவுள் ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில்  அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலித்து வரும் நிலையில் அறக்கட்டளை பெயரில் நிலம் வாங்கியுள்ளது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இந்த மோசடி புகார்களை ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளையின் சார்பாக வெளியிட்ட அறிக்கையில், ராமர் கோவிலுக்கான நிலம் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது.
ஏற்கனவே நிலத்தின் உரிமையாளர்கள் விற்ற நிலத்துக்கு பதிவுதான் அன்றைய தினம் செய்தனர் என விளக்கம் அளித்திருக்கிறார்.  இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், கடவுள் ஸ்ரீ ராமர் என்பவர் நீதி, உண்மைக்கு நிகரானவர். அவரது பெயரில் ஏமாற்றுவது அநீதி என்று பதிவிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

Admin

பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

தாலிபான்கள் தான் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் .. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

Admin

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

ட்விட்டர் ஒரு ஆபத்தான விளையாட்டு : ராகுல்காந்தி விமர்சனம்!

Admin

பெட்ரோல், டீசல் வரி குறைப்பது தற்போது சாத்தியம் இல்லை: பி.டி.ஆர்

Admin

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

Admin

சாக்கடையில் தான் மலரும்… பாஜக ஆதரவாளரை விளாசிய நடிகர் சித்தார்த்…

Admin

கோமா… உடல்நலக் கோளாறு… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த சாந்தன் இறப்பு

Pamban Mu Prasanth

Leave a Comment