பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

சர்வதேச தாய்மொழிகள் நாள்
SHARE

உலகம் பிறந்ததும் உடன்பிறந்த மற்றொன்று ஓசை என்பார்கள். இன்று வரைக்கும் குழந்தை பிறந்ததும் கூடவே பிறக்கிற ஓசைதான் இதற்குச் சான்று. அதன்பிறகு இடத்தையும், சூழலையும், காரணகாரியத் தேவைகளையும் முன்னிட்டு ஓசைகள் வளைந்தன. விளைவு, மொழிகள் பிறந்தன.

இப்படி பிறந்து,இருந்து,திரிந்து,அழிந்து என எல்லாம் போக ஏறக்குறைய 6000க்கும் மேற்பட்ட மொழிகள் உலகெங்கும் பேசப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 21) உலகெங்கும் இருக்கும் ஒவ்வொரு மொழிக்குமான பொதுதினமான உலகத் தாய்மொழிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

எப்படித் தோன்றியது:
பெரும்பாலும் உலகளாவிய தினங்கள் எல்லாம் ஏதாவது பெயர் தெரியாத நாட்டின் அடையாளம் தெரியாத மூலையில் நடைபெற்ற கிளர்ச்சியின் விளைவாகவோ, அதிர்ச்சியின் விளைவாகவோ உருவானவையாக இருக்கும். ஆனால், இந்த தாய்மொழிகள் தினம் உருவாகக் காரணம் இந்தியாதான்.

அது 1952 ஆம் ஆண்டு. பிப்ரவரி 21. அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகரான டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் ஆகிய நான்கு மாணவர்கள் உயிர் நீத்தனர்.
அந்த மாணவர்களின் நினைவாகத்தான் இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 21ஆம் தேதியை உலகத் தாய்மொழிகள் தினமாக, ஐ.நா.வின் பண்பாடு சார் அமைப்பான யுனெஸ்கோ அமைப்பு 1999ஆம் ஆண்டு அறிவித்தது. அதற்கு அடுத்த ஆண்டான, 2000ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேசத் தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

ஆனால், ஐ.நா.பொது சபையால் 2007ஆம் ஆண்டுதான் அதிகாரப்பூர்வமாகத் தீர்மானம் இயற்றப்பட்டது என்பது இதில் தனிக்கதை.

எல்லோருக்கும் தத்தமது தாய்மொழிகளைக் கொண்டாட இருக்கும் உரிமையை இந்த நாள் நினைவூட்டுகிறது. அதே சமயம் அதை முன்னிட்டு இன்னொரு மொழியை இழிவு செய்வதற்கான உரிமை இல்லை என்பதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும்.


மொழிகளுக்கு முடிவே இல்லை:

மொழிக்கு மொழி மாறும் நெழிவு சுழிவுகளை இழிவாகக் கிண்டல் செய்யும் மலினமான போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், புதிய புதிய மொழிகள் உருவாவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே உள்ள ஆனைகட்டி என்னும் ஊரில் வாழ்ந்த தாசனூரு நாராயணன் என்பவர் ஆதன் என்ற புதிய மொழியை உருவாக்கி அதில் ஒரு நாவலையும் எழுதி உள்ளார். ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அந்த மொழியை பயிற்றுவித்தும் உள்ளார்.

அதே போல, அந்தமான் தீவுகளில் கடைசி மனுஷி ஒருத்தி பேசிக்கொண்டிருந்த ’போஅ’ எனும் மொழியை, ஆராய்ச்சி என்ற பெயரில் அழைத்து வந்து கவனக்குறைவால் கண்முன்பாகவே இல்லாமல் ஆக்கியதும் நடந்திருக்கிறது.

அவரவர் தாய்மொழியைக் கொண்டாடுதல் என்பதற்குப் பின்னே, அடுத்த தலைமுறைக்கு மொழியைக் கொண்டாடுவதில் இருக்கும் மகிழ்ச்சியை உணரவைத்தல் என்ற நோக்கம் உறைந்திருப்பது இந்த நாளில் உணர வேண்டிய அம்சம்.

உலகெங்கும் இருக்கும் 6000க்கும் மேற்பட்ட மொழிகளில் 43% மொழிகளில் அழியும் நிலையில் உள்ளன என்பதும், இந்த 6000 இல் 2000க்கும் அதிகமான மொழிகள் 100க்கும் குறைவான பேரால் மட்டுமே பேசப்படுகின்றன என்பதும் இந்த நாளில் கவனிக்கப்பட வேண்டியது. இன்னும் எண்ணிக்கைக்குள்ளும் வராத மொழிகள் உட்பட, உலகெங்கும் உள்ள எல்லா மொழிக் குடும்பங்களுக்கும் மெய்யெழுத்து சார்பாக உலகத் தாய்மொழிகள் தின வாழ்த்துகள்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கையெழுத்து போட்ட ஜோபைடன் ..அமெரிக்காவில் டிக் டாக் தடை இனி இல்லை!

Admin

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

இந்தியாவில் 68% அளவுக்கு சரிந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள்!!

Admin

இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

Admin

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

நீங்கள் அப்பளப் பிரியரா ? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு!

Admin

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

இ-ருபி பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமா் மோடி

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 27 நாளில் தூக்குதண்டனை

Admin

Leave a Comment