ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா!: உச்சபட்ச பாதிப்பில் இந்தியா!

SHARE

வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது!.

நேற்று ஒருநாளில் மட்டும் இந்தியாவில் 1,03,558 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஒருலட்சத்தைக் கடப்பது இதுவே முதன்முறை ஆகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் சில நாட்களில் 97,000 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதே முந்தைய உச்சபட்ச அளவாக இருந்தது.

மேலும் நேற்றைய ஒருநாளில் அதிகம் கொரோனா பரவலை சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக அதிக கொரோனா பாதிப்பு காணப்படும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 478 பேர் பலியாகி உள்ளனர்.

நாட்டிலேயே கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 57,074 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பை நகரத்தில் மட்டும் 11,163 பேர்கள் கொரோனாவுக்கு இலக்காகி உள்ளனர். தமிழ்நாட்டிலும் அன்றாட கொரோனா பாதிப்பு 500, 1000 எனத் தொடர்ந்து உயர்ந்து தற்போது 3500 என்ற அளவை எட்டியுள்ளது.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்அரசு வேலை இல்லை: உ.பி.யில் விரைவில் புதிய சட்டம்

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் – ஹால் டிக்கெட் வெளியீடு

Admin

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

கிரிக்கெட் விளையாடும் முதலமைச்சரின் புகைப்படம் வைரல்..!!

Admin

ஊசி போட்டால் மாஸ்க் வேண்டாம்! – அமெரிக்காவில் அப்படி…

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin

மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

Leave a Comment