ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் நிவாரண நிதி: அமெரிக்கா அளிக்க உள்ளது

SHARE

அமெரிக்கா

நமது நிருபர்.

உலக அளவில் கொரோனாவின் பாதிப்பும் பலி எண்ணிக்கையும் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. தொடக்கம் முதலே கொரோனா அமெரிக்காவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இயலாத காரணத்தாலும் அமெரிக்க மக்கள் வேலை இழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரியில் ஜோ பைடன் தலைமையிலான புதிய அரசு அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தது. ’கொரோனாவில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி அளிப்போம்’ – என்று தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்திருந்த ஜோ பைடன், அதற்காக ’கொரோனா நிவாரண நிதித் திட்டம்’ என்ற பிரம்மாண்ட மக்கள் நலத் திட்டத்தை அறிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள 85 சதவிகிதம் குடும்பத்தினருக்கு இந்த மாதத்திற்குள் தலா ஆயிரத்து நானூறு டாலர்கள் தொகையை அளிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கியப் பகுதி ஆகும். இதற்காக ஒரு லட்சத்து தொன்னூறாயிரம் கோடி அமெரிக்க டாலர்களை ஜோ பைடன் அரசு ஒதுக்கியது.

இந்த கொரோனா நிவாரண நிதிக்கான மசோதா மார்ச் 10ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றமான செனட்டில் நிறைவேறி உள்ளது. இதனால் அமெரிக்கக் குடும்பங்கள் விரைவில் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண நிதியைப் பெற உள்ளன.

இந்தப் பணிகளோடு, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகளின் தயாரிப்பை அதிகரித்து, அதன் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்க அரசு திட்டம் வகுத்து உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அமேசான் சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து ஜெப் ஃபெசோஸ் விலகல்.. இதுதான் காரணமா.?

Admin

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு .. 3 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்திய பிரதமர்

Admin

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடிப்பு…13 பேர் பலி…

Admin

ரொம்ப தப்பு பண்ணுறீ ங்க… ஆப்கனில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்: ஜார்ஜ் புஷ் கண்டனம்

Admin

ஆப்கானிலிருந்து தப்பிய சிறுமியின் புகைப்படம் வைரல்

Admin

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

உடைந்த பாறை… உறைந்த மக்கள்… ஜப்பானை அச்சுறுத்தும் ஒன்பதுவால் நரி!.

கேட்ஸ் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுகிறார் பில் கேட்ஸின் மனைவி மெலின்டா

Admin

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

Leave a Comment