வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

SHARE

ஐபிஎல் தொடரின் 6ஆவது ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆனால் அந்த அணியின் கேப்டன் கோலி எச்சரிக்கைக்கும் ஆளானார்!.

சேப்பாக்கம்:

நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 6வது ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 149 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் சன்ரைசர்ஸின் மோசமான ஆட்டத்தால் ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

இந்த ஐ.பி.எல். தொடரில் இதற்கு முந்தைய மும்பை இண்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான ஆட்டத்தில் எப்படி கடைசி 5 ஓவரில் ஆட்டமே மாறி மும்பை இண்டியன்ஸ் வசம் சென்றதோ அதே தான் நேற்றும் நடந்தது.

சன்ரைசர்ஸ் அணியில் வார்னர் மற்றும் மனீஷ் பாண்டேவின் பார்ட்னர்ஷிப் நல்ல ரன்ரேட்டை கொடுத்தது. கடைசி 4 ஓவரில் 35 ரன்கள் தேவை என்னும் நிலையில் தான் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழந்தன. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் அகமது ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை எடுத்து போட்டியின் பாதையையே மாற்றி விட்டார். 

இந்த வெற்றி ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் கோலியின் அதிர்ஷ்டம் என்று பார்க்கப் பட்டாலும், அவருக்கு இது முழுமையான அதிர்ஷ்டமாக இல்லை!. ஐபிஎல் நிர்வாகம் நேற்று கோலியின் ஒழுங்கீன செயலுக்காக அவரை கண்டிக்கவும் செய்தது!. 

நேற்று நடந்த போட்டியில் கோலி 33 ரன்கள் எடுத்திருந்த போது, ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடுப்பில் வெளியேறிய கோலி, வீரர்கள் அமர்வதற்காக போடப்பட்டிருந்த நாற்காலியில் தன்னுடைய பேட்டால் குத்தி, நாற்காலியை தள்ளி விட்டு சென்றார். இந்த காட்சி நேற்று நேரலையிலும் ஒளிபரப்பட்டது. இதை பார்த்த ஐபிஎல் நிர்வாகம் கோலிக்கு ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கண்டிப்பும், எச்சரிக்கையும் விடுத்தது. கோலி இப்படியாக கண்டிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்!.
– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா?: ரிசர்வ் வங்கி சொல்வதைக் கேளுங்கள்…

Admin

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

விம்பிள்டன் டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆஷ்லே பார்டி

Admin

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்..!!

Admin

சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம்

Admin

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா – இலங்கை இன்று மோதல்

Admin

காலில் மாஸ்க்போட்ட அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்

Admin

Leave a Comment