‘‘தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்’’: கீழடியில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

SHARE

கீழடி அருகே அமைந்துள்ள அகரத்தில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் கொண்ட சுவர் கண்டறியப்பட்டுள்ளது.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தொன்றியது தமிழ் நாகரிகம் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லி வருகிறது கீழடி.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கீழடியை தொடர்ந்து அகரத்தில் முதல் முறையாக மூன்று வரிசை கொண்ட சுடுமண் செங்கல் சுவர் கண்டறியப்பட்டுள்ளது.

முன்பு கீழடியில் கிடைத்த செங்கல் நீளம், அகலம் கொண்டதாக இருந்தது. ஆனால் அகரத்தில் செங்கற்கள் மாற்பட்ட வடிவில் உள்ளன அதுவும். மூன்று வரிசையாக செங்கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்து கட்டிடம் கட்டியுள்ளனர்.

பிடிமானத்திற்காக களிமண் பயன்படுத்தி இருப்பதாக ஆராய்ச்சியளர்கள் கூறுகின்றனர்.

அகரத்தில் இதுவரை 4 அடி ஆழத்திற்கு மட்டும் அகழாய்வு பணிகள் நடந்துள்ளநிலையில் தற்போது சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு சுவர் கிடைத்துள்ளது .

இதன் மூலம் பழந்தமிழர்களின் நாகரிக வாழ்க்கை தமிழர்களின் வரலாற்றை மேலும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.

மேலும் அகரத்தில் தொடர்ந்து அகழாய்வு செய்த பின்னர்தான் சுவரின் முழு வடிவமும் தெரியவரும் என அகழாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

பெற்றோரை இழந்த குழந்தைகள்.. வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி

Admin

பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Admin

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

Admin

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம்..!!

Admin

ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு சேர்த்த ட்விட்டர் நிறுவனம்…!

Admin

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி…!

Admin

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

ஒரு லட்சத்தை அபராதமா கட்ட விருப்பமில்லை : சொகுசு கார் வழக்கில் விஜய் தரப்பு வாதம்

Admin

போட்ட வேஷம் மாறியதோ..? இதுதான் விடியலா? ஸ்டாலினை விமர்சித்த வானதி

Admin

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Admin

1 comment

Leave a Comment