நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது அவருக்குப் பதிலாக மாதேஷ்வரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வெளியான சாதியவாத காணொலிகளின் விளைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாயின. ஆனால், சூரியமூர்த்தியிடம் பேசியபோது அதனை அவர் மறுத்தார்.
அதை உறுதி செய்வது போலவே, நேரடியாக காரணங்கள் எதையும் குறிப்பிடாமல், வெறுமனே வேட்பாளர் மாற்றம் என்று மட்டும் அறிவித்துள்ளது கொங்கு மக்கள் தேசிய கட்சி.
அதே சமயம், புதிய வேட்பாளர் மாதேஷ்வரனிடம் பேசியபோது, “பரவி வந்த காணொலிகள்தான் காரணம் என்று தனக்கு செவிவழி செய்தியாக சொல்லப்பட்டது” என்று நம்மிடம் தெரிவித்தார்.
நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது அவருக்குப் பதிலாக மாதேஷ்வரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.