தமிழக பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை நேற்று சென்னை கமலாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அண்ணாமலை, எல்.முருகன், சி.டி ரவி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றபோது அவருடைய சுய விவரத்தில் கொங்குநாடு என இடம்பெற்றிருந்தது குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது.
இதுகுறித்து அண்ணாமலை பதிலளித்தபோது,தற்போது ட்விட்டரில் அனைவருமே தங்களுடைய அடையாளமாக பாண்டிய நாடு, சோழ நாடு, கொங்குநாடு என போட்டுக்கொள்கின்றனர்.
அதுபோல முருகனும் தமிழ்நாட்டிலிருந்து மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட ஒருவர்” என்று கூறினார்.
மேலும் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றபோது, அவருடைய சுயவிவரக்குறிப்பில் கொங்குநாடு” எனக் குறிப்பிட்டிருந்தது தட்டச்சுப் பிழையேஇது விவாதத்திற்குரிய விஷயமே அல்ல என தனி விளக்கம் கொடுத்தார் தமிழக பாஜகவின் மாநில தலைவர்அண்ணாமலை.