நெல்லையில் 15 கோடி ரூபாய் செலவில் நவீன அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் அறிவிப்புகளை வெளியிடுவதாக உரையைத் தொடங்கினார்.
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், பொறுப்பேற்கும் போதெல்லாம் தமிழ் அரசினை நடத்தியது திமுக தான் என்று பெருமிதம் தெரிவித்தார்.
பண்டைய நாகரீகத்தினர் தமிழன் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளதாகக் கூறிய ஸ்டாலின்,சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நெல்லையில் 15 கோடி செலவில் நவீன அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.