தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

SHARE

ஐபிஎல் லீக் போட்டியின் நேற்றைய 2வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை விழ்த்தி வெற்றி பெற்றது. 

வான்கடே, மும்பை

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய கேஎல் ராகுல், மற்றும் மயங் அகர்வால் நல்ல ஆட்டத்தை கொடுத்து இருவரும் 12 ஓவர் வரை பார்ட்னர்ஷிப்பில் விளையாடினர். மயங் அகர்வால் அதிரடியாக ஆடி முந்தைய போட்டிகளில் ஆட முடியாமல் போனதை இந்த போட்டியில் சரி செய்து பந்துகளை தெறிக்க விட்டார். வோக்ஸ், ரபாடா, லலித் என அனைத்து பந்துவீச்சாளர்களையும் திறமையாக எதிர்கொண்டார் விட்டார் மயங். ஆட்டத்தின் 13வது ஓவரில் மேரிவாலா பந்துவீச்சில் மயங் அகர்வால் 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

கேஎல் ராகுல் நிதானமாக ஆடி தனது 33 வது அரை சதத்தை கடந்தார். கெயில் வந்ததற்கு ஃபிரீ ஹிட்டில் ஒரு சிக்ஸ் அடித்து, பின்னர் வோக்ஸ் பந்து வீச்சில் அவுட்டாகி சென்றார். அடுத்து பூரானும், ஹுடாவும்  சில பவுண்டரிகளை தட்டி விட்டனர். 19வது ஓவரில் வந்த ஷாருக் கான், 20வது ஓவரில் ஸ்ட்ரைக் எடுத்து, 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என தூள் கிளப்பினார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்தது. 

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட வந்தது டெல்லி கேபிடல்ஸ். தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ப்ரித்வி ஷா மற்றும் தவன், பஞ்சாப் அணியின் கேஎல்ராகுல் மற்றும் மயங் அகர்வால் போலவே நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்து ஆட்டத்தையே மாற்றி விட்டனர். பவர்பிளே ஓவர்களில் ப்ரித்வி ஷாவின் விக்கைட்டை மட்டும் எடுத்தார் அர்ஷ்தீப். பிரித்வி ஷா 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

டெல்லி அணிக்கு தவன் தான் ஆபத்பாண்டவனாக இருந்தார். தவன் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளை அடிக்க தவறவே இல்லை. நிதானித்து ஆடி பந்துகளை தெறிக்க விட்டார் தவன். 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என ரன் சேஸிங்கை குறைத்துக் கொண்டே வந்தார். அடித்து ஆடிய தவன் எப்படியும் அவரே மேட்ச்சை முடித்து விடுவார் என்ற பயத்துடன் பஞ்சாப் இருந்த நிலையில், ஜூய் யின் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார். 49 பந்துகளில் 92 ரன்கள் எடுத்திருந்தார் ஷிகர் தவன். 

அடுத்து ஆடிய ஸ்டாய்னிஸ் மற்று பண்ட் நிதானமாக அடி ரன்களை எடுத்தனர். பஞ்சாபுக்கு ஆப்பு 17 வது ஓவரில் தான் வந்தது. ஷமியின் பந்தை ஸ்டாய்னிஸ் அடித்து கேட்ச் போனது. ஆனால் டெல்லி அணி அந்த பந்து இடுப்புக்கு மேல் போனது என்று ரிவ்யூ சென்றனர். இதனால் பஞ்சாபுக்கு ஒரு விக்கெட் போனது. டெல்லிக்கு ஒரு நோ பாலும், ப்ரீஷிட்டும் அதில் ஒரு சிக்சரும் கிடைத்ன. டெல்லிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டதட்ட நெருங்கியது. கடைசி பேட்ஸ்மேனாக வந்த லலித் 2 பவுண்டரிகளை தட்டினார். இறுதியில் 18.2 ஓவரில் ஸ்டாய்னிஸின் பவுண்டரியில் ஆட்டம் முடிந்து, டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை… அதிர வைத்த மத்திய அரசு

Admin

வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா?: ரிசர்வ் வங்கி சொல்வதைக் கேளுங்கள்…

Admin

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

வீணான இஷான் கிஷனின் சாதனை. வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்…

இந்தியாவில் அதிக மொழி பேசும் மாவட்டம் இதுதான்.. ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்…

Admin

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

வாட்ஸ் -அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… புதிய வசதி அறிமுகம்

Admin

யூரோ கோப்பை கால்பந்து : இத்தாலி அணி சாம்பியன்

Admin

கருப்புப் பூஞ்சைக்கான மருந்து மே 31 முதல் விநியோகம்!.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ஆர்பிஐ

Leave a Comment