தமிழ்நாட்டைப் பிரிக்க எழுந்திருக்கும் விஷமக்குரல்களை அடக்கிட வேண்டும்: டிடிவி தினகரன்!

SHARE

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களை கொண்ட கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக நேற்றைய தினசரியில் செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலான நிலையில், தமிழகத்தை பிரிக்க முடியாது என திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம்.

 எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.என்று கூறியுள்ளார்.

மேலும் ‘ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும்.

எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும்.’ என தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விரைவில் முதலமைச்சராகிறாரா உதயநிதி? – சட்டப்பேரவையில் அமைச்சர் எவ. வேலு சூசகம்

Admin

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

Admin

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

மணிகண்டனை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை ? பொங்கி எழுந்த புகழேந்தி

Admin

மூன்றாவது அலை வருமா என தெரியாது? ஆனால் கவனாம இருக்கணும் – ராதாகிருஷ்ணன் பேட்டி!

Admin

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

Admin

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

டிரம்புக்கு தடை: அதிரடியில் இறங்கிய பேஸ்புக்!

Admin

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

மேகதாது அணைகட்டுவதில் பின்வாங்கும் பேச்சே கிடையாது: முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய்

Admin

Leave a Comment