பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் வரலாறு… பெருகும் எதிர்ப்பு

SHARE

கண்ணூர் பல்கலைக்கழகத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் உள்ளிட்டவர்களின் வரலாறு சேர்க்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எம்ஏ நிர்வாகம் மற்றும் அரசியல்.துறையின் 3வது செமஸ்டர் பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைவாதிகளான  சாவர்க்கர்,கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரின் வரலாறு சேர்க்கப்பட்டுள்ளன. 

இதற்கு கேரள மாணவர் அமைப்பு(KSU), கேரள இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு (MSF) ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது.இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கோபிநாத் ரவிந்திரன் விளக்கம் ஒன்றை அளித்தார்.

. அரசியல் பாடப்பிரிவை கண்ணூர் பல்கலைக்கழகம் காவி மயமாக்குவதாக கூறப்படுவது தவறு. பாடத்திட்டத்தை தயாரித்தவர்கள் பல்வேறு இயக்கங்களின் தொடக்க உரைகளையும் இணைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும்  இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்  சுதந்திர போராட்டத்தை புறக்கணிந்த எந்த சித்தாந்தத்தையும் தலைவர்களையும் பெருமைப்படுத்த மாட்டோம் என்பதில் தாங்கள் தெளிவாக உள்ளோம். யாரும் அதை செய்ய மாட்டார்கள் என திட்டவட்டமாக கூறினார்.

இது தொடர்பாக மாநில உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பல்கலைக்கழக பாடத்திட்டம் குறித்த அறிக்கையை கேட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

Admin

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும்… ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு…

Admin

வருமானவரி செலுத்த முடியவில்லை… வட்டிமேல் வட்டி போடுகிறார்கள் – கங்கனா ரனாவத் வேதனை

Admin

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் :அறிக்கை அனுப்ப உத்தரவு!

Admin

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ஆர்பிஐ

Leave a Comment