வேளாண் பட்ஜெட் 2024: `ஒரு கிராமம் ஒரு பயிர்` – ம.பியில் வென்ற திட்டம் தமிழ்நாட்டில் வெல்லுமா?

one village one product
SHARE

ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இன்று (20..02.2024) சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு சொல்வது என்ன?

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற திருக்குறளுடன் தொடங்கிய இந்த வேளாண் பட்ஜெட்டில் கவனிக்கத்தக்க அம்சங்கள் இருந்த நிலையில், ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற திட்டம் கூடுதல் கவனம் பெறுகிறது.

தமிழ்நாட்டில் 15,280 வருவாய் கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம வாரியாக, முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களின் சாகுபடிக்கான நவீன உதவிகளையும் மானியங்களையும் வழங்கி உற்பத்தியை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கம்.

இதற்கு முன்னதாக மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சௌஹான் ஆட்சியின்போது இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலத்தின் விவசாயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கு காரணமாக அமைந்த திட்டம் என்கிறார் பிகார் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ஆதிஷ் பரஷார்.

அதே சமயம், நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களால் இந்த திட்டத்தை அம்மாநில அரசால் தொடர முடியாமல் போனது என்றும் சுட்டிக்காட்டினார்.




SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

பதவியை ராஜினாமா செய்த பிரசாந்த் கிஷோர்… அதிர்ச்சியில் பாஜக… அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன?

Admin

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரை!

Admin

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம்..!!

Admin

தமிழக அரசின் திட்டத்தை கேலி செய்து… சர்ச்சை கார்டூன் வெளியிட்ட துக்ளக்!

Admin

சென்னையில் சதமடித்தது பெட்ரோல் விலை… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…

Admin

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க சுற்றுச்சூழல்துறை அனுமதி தேவையில்லை..அமைச்சர் துரைமுருகன்

Admin

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி…!

Admin

Leave a Comment