கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

SHARE

கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளை அமைப்பது பற்றி ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறினார். 

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, பல்வேறு மாநிலங்களில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகல் உயிரிழந்த சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க அயல்நாடுகளில் இருந்து உதவிகள் கிடைத்தாலும் மருத்துவமனைகளில் போதிய வசதி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் பலர் மருத்துவமனையின் வாயில்களில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.  இந்த சூழலில் தமிழக அரசு கொரோனா சிகிச்சையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசும்போது நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும் என்றும்,  கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அமைக்க முடியுமா என ஆராய்ந்து வருவதாகவும், இதற்காக சுகாதாரத்துறையுடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.

இந்தியா முழுவதும் ஆம்புலன்ஸ்கள், படுக்கைகள் ஆகிய இரண்டுமே பற்றாக்குறையில் உள்ள இந்த சூழலில் தமிழக அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு கூடுதல் நம்பிக்கையை தந்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தை பிரதமர் மோடியே பாராட்டினார்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Admin

முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி ரெய்டு..!!

Admin

அரசு ஊழியர்களுக்கு கொரோனா உதவி வழங்க தடை – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Admin

யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம்..? வனதுறையினர் விளக்கம்

Admin

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

பாலியல் வன்கொடுமை குற்றவாளியை சுட்டுப்பிடித்த சென்னை போலிஸ் – நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?

Admin

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Admin

விஜய்யை நீதிபதிகள் விமர்சித்தது தேவையில்லாதது: முன்னாள் நீதிபதி சந்துரு அதிருப்தி

Admin

Leave a Comment