பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

SHARE

சிறுமிகளை, பெண்களை ஆபாசமாக பேசி யூடியூப்பில் பதிவேற்றம் செய்த வழக்கில் கைதான பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டை பிரைவேட் சர்வர் மூலமாக விளையாடி, அதை யூடியூப் வலைதளத்தில் ஸ்ட்ரீமிங் செய்து வந்தவர் மதன்.

இவரது யூடியூப் சேனலை பின்தொடர்பவர்கள் பப்ஜி விளையாட்டால் ஈர்க்கப்பட்ட 18 வயதுக்கு கீழ் உள்ளவர் தான் என்று கூறப்படுகிறது.
இந்த யூடியூப் சேனலில் பெண்களை பற்றி ஆபாசமாக பேசி தனது யூடியூப் பக்கத்தில் பதிவுகளை மதன் வெளியிட்டு வந்தார். இதன்மூலம் லட்சக்கணக்கில் பணத்தையும் சம்பாதித்துள்ளார்.

இது குறித்து மதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக்ரபி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் கொடுத்தார்.

சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

மதன் மீது 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய சைபர் கிரைம் தனிப்படை போலீசார், அவரது சொந்த ஊரான சேலம் விரைந்தனர். ஆனால் சேலத்தில் அவர் இல்லை.

மதனை தொடர்ந்து போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தர்மபுரியில் தனது நண்பர் வீட்டில் தங்கி இருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார், நேற்று காலை மதனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் உடனடியாக சென்னை அழைத்து வரப்பட்டார்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து ஆடி சொகுசு கார், 4 லேப் டாப்கள் மற்றும் டிரோன் கேமரா ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மதனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதனை போலீசார் ஆஜர்படுத்தினர்.

மதனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 700 வீடியோக்களிலும் ஆபாசமாக பேசியது மதன் தான் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை ஜூலை 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மதன் தற்போது பூந்தமல்லி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெற்றோரை இழந்த குழந்தைகள்.. வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி

Admin

ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு சேர்த்த ட்விட்டர் நிறுவனம்…!

Admin

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

மகாபஞ்சாயத்து 2024: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறைகூவல்

Admin

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Admin

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

வீல்சேரில் விஜயகாந்த்.. சோகத்தில் ரசிகர்கள்…

Admin

இன்று திட்டமிட்டபடி நீட் தேர்வு..நாளை நீட்டுக்கு எதிராக தீர்மானம்…

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

Leave a Comment