‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

SHARE

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன் புத்தகம் இணையத்தில் இளைஞர்கள் மத்தியில் வைரலானது அப்படி அந்த புத்தகத்தில் என்ன உள்ளது ?காண்போம் இந்த தொகுப்பில்.

ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன் புத்தகம் திராவிடத்தின் பல்வேறு சிறப்புகளை சொல்லும் புத்தகமாகும்.இந்த புத்தகம் 2019ம் ஆண்டு வெளியான போதே பெரும் வரவேற்பை பெற்றது. சோனியா காந்திக்கு , மு..க.ஸ்டாலின் பரிசளித்ததன் வாயிலாக மீண்டும் இந்த புத்தகம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது.

வரலாற்று ஆய்வாளரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் இப்போது ஒடிசா முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக இருக்கிறார்.

பல வருடங்கள் நீண்ட ஆய்வுக்குப்பிறகு இந்த புத்தகத்தை எழுதினார். புத்தகத்தின் முக்கிய கருத்து என்னவென்றால் இந்திய வரலாற்றில் சிந்து சமவெளி நாகரிகம் பற்றியும் அந்த மக்கள் தங்களின் கடைசி காலகட்டத்தில் எங்கு சென்றனர் என்பது குறித்து விவரிக்கிறது.

இரண்டாவதாக சங்க கால இலக்கிய தோற்றம் குறித்தும் அவற்றை எழுதிய ஆசிரியர்கள் பற்றியும் விவரிக்கும் இந்த புத்தகம் 17 அத்தியாயங்களுடன், மூன்று பிரிவுகளாக உள்ளன.

டிஎன்ஏவின் அடிப்படை, இடப்பெயர்வுகள், இடத்தின் பெயர் மற்றும் திராவிட மக்களின் வாழ்க்கை முறை குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது

தமிழரின் மரபினை மீண்டும் பறை சாற்றிய ஆதிச்ச நல்லூர் வரையில் வைகை வழியே பானை பாதை தொடர்புகளை இந்த புத்தகம் விளக்குகின்றது.

மொகஞ்சதோராவில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது கிடைத்த காளை மாடு முத்திரையும் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பு உள்ளதை பாலகிருஷ்ணன் தனது ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன் கூறியுள்ளார்.

திராவிடர்கள், அதாவது நம் தமிழர்களின்பூர்வ குடி சிறப்புகளை கூறும் இந்த புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் இப்போது சோனியா காந்திக்கு பரிசாகக் கொடுத்துள்ளார் .

பதவியேற்றதும் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘Belongs to the Dravidian stock’ என்று சேர்த்துக்கொண்ட மு.க.ஸ்டாலின், தற்போது புத்தகத்தை பரிசளித்தன் மூலம் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எனதருமை டாஸ்டாய் – உலக ஆளுமைகளுடன் உள்ளூர்மொழி பயணம் – புத்தக அறிமுகம்

Admin

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் : ஆசிரியர் தினம் பிறந்த கதை தெரியுமா

Admin

இளையராஜா பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன்? – கவிஞர் மகுடேசுவரன் சிறப்புக் கட்டுரை.

மனித ரத்தத்திலும் நுழைந்த பிளாஸ்டிக்! – உலகை உலுக்கிய ஆய்வு முடிவு!

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – நூல் மதிப்புரை

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

World Letter Writing Day : கடிதங்களை சாதாரணமா நினைக்காதீங்க

Admin

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை – நூல் மதிப்புரை

இடது கையின் பின்னே இவ்வளவு இருக்கா? – சர்வதேச இடது கை நபர்கள் தின சிறப்புக் கட்டுரை!.

Leave a Comment