தனுஷால் கெத்து காட்டிய “வேலை இல்லா பட்டதாரி”கள்…டிவிட்டரில் கொண்டாட்டம்

SHARE

தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி படம் வெளியாகி இன்றோடு ஏழு வருடங்கள் ஆகியுள்ளதை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ், முதன்முதலாக இயக்குநராக அறிமுகமான படம், ’வேலையில்லா பட்டதாரி’. இந்தப் படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்து, நடித்தார்.

இது அவருக்கு 25 வது படம். இந்த படத்தில் அமலாபால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக், சுரபி உட்பட பலர் நடிக்க படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

இந்த படத்தில் தனுஷ் இன்ஜினியரிங் முடித்த வேலையில்லா பட்டதாரியாக நடித்திருப்பார்.

அவரின் எதார்த்தமான நடிப்பும் படத்தின் திரைக்கதையும் அதுவரை தமிழகத்தில் வேலையில்லாமல் பல்வேறு இடங்களில் அவமானப்பட்ட பட்டதாரி இளைஞர்களை காலரை தூக்கிவிட்டு விஐபி என்னும் அடைமொழியோடு அழைக்கும் வண்ணம் அமைந்தது.

மேலும் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக அம்மா சென்டிமென்ட் பாடல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து பிரபல பாடகி ஜானகி பாடியிருந்தார்.

இந்நிலையில், இந்தப் படம் வெளியாகி இன்றோடு ஏழு வருடம் ஆனதை அடுத்து, #7YearsOfBlockBusterVIP என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ.1000 கோடி இழப்பீடு தர வேண்டும்!: பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்.. தெறிக்கவிடும் பீஸ்ட் அப்டேட்..

Admin

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

என்னை உன்னால் பிடிக்க முடியாது… புலிக்கு டிமிக்கி கொடுக்கும் வாத்து வைரலாகும் வீடியோ

Admin

ஒரு லட்சத்தை அபராதமா கட்ட விருப்பமில்லை : சொகுசு கார் வழக்கில் விஜய் தரப்பு வாதம்

Admin

”கை நழுவிய காதல்..!”. மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 2.

இரா.மன்னர் மன்னன்

வேளாண் பட்ஜெட் நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் – கமலஹாசன்

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

Admin

சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

Admin

Leave a Comment