பிக்பாஸ் நாட்கள். நாள்: 22 “தலைவர் மதுமிதா!”

SHARE

”நெருப்பு கூத்தடிக்குது… காத்தும் கூத்தடிக்குது…” என்ற பாடலுடன் தொடங்கியது நாள். பிக் பாஸோட குட்மார்னிங் சாங்கில் எப்பவும் யாருக்காவது மெசேஜ் இருக்கும், இந்த பாட்டும் அதே மாதிரிதான். இந்த வாரம் நெருப்பு வாரம் என்றும் பஞ்சதந்திரம் போட்டியில், நெருப்பு நாணயம் வைத்திருக்கும் இசைவாணிக்கான ஸ்பெஷல் வாரம் என்பதால், அவர் இருக்கும் கிச்சன் ஏரியா அவர் கண்ட்ரோலில்தான் இயங்கும் என்றும் பிக் பாஸ் அறிவித்தார். 

பிக் பாஸ் சொன்ன உடனேயே, இசைவாணி ’என்னைக் கேக்காம கிச்சனில் எதுவும் எடுக்காதீங்க… இதுக்காக யார் என்னை கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை’ என்று கூறிக்கொண்டிருந்தார். ஆனால் பாவம், இசைவாணி சொன்னதை யாரும் சட்டையே செய்யவில்லை. அதற்கேற்றார் போல் இசைவாணியும் மற்றவர்களை சரியாகக் கவனிக்கவில்லை… நிரூப் அதிக புளியை ஊறவைத்தது, தாமரை அதிக எண்ணெய்யுடன் குழம்பு வைத்தது என்று தவறுகளை கூறிய இசை, இந்த தவறுகளை நடப்பதற்கு முன்னே எச்சரிக்கையுடன் கவனிக்கத் தவறிவிட்டார்.

வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றது. ஒருவர் மற்றவரை பார்த்து தங்களுக்கு பிடித்த இன்னொரு நபரின் பெயரை வைத்து கூப்பிட வேண்டும் என்பது டாஸ்க். ஒரு பெயரை இரண்டு முறை பயன்படுத்தினால் அவுட்.

இதில் கடைசி வரை வந்தது பிரியங்கா மற்றும் மதுமிதா. அடுத்து இவர்களுக்குள் நடந்த பந்துகளை பிடிக்கும் போட்டியில் நூலிழையில் பிரியங்கா தோல்வி அடைய மதுமிதா இந்த வாரத்தின் தலைவர் ஆனார். இதில் ஹைலைட்டான விஷயமே பந்துகளை பிடிக்கும் போட்டியில் மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பந்துகளை போடுவதில் மும்முரமாக இருக்க, அக்ஷரா மட்டும் பிரியங்காவையே கவனித்துக் கொண்டிருந்தார் போல, பிரியங்கா கூடையில் 23 பந்துகளும், மதுமிதா கூடையில் 21 பந்துகளும் இருந்தது, இதை வைத்து பார்க்கும் போது பிரியங்கா தான் தலைவராக வேண்டியது, ஆனால் அக்ஷரா ’நாம எறிந்த ரெண்டு பந்துகள்  கூடையிலே விழுந்துவிட்டது’ என்று தெரிவிக்க, பிக் பாஸிடம் சிபி இதற்கு விளக்கமும் கேட்டார். அதற்கு, ’அந்த ரெண்டு பந்துகள் கணக்கில் வராது’ என்று பிக்பாச் தெரிவிக்க… பிரியங்காவின் பந்து எண்ணிக்கை குறைய, மதுமிதா தலைவரானார்… அக்ஷரா நல்லவரா… கெட்டவரா..?

அடுத்து நடந்தது நாமினேஷன் ப்ராஸஸ்… அய்யா பிக் பாஸ்…எந்தெந்த காரணங்களுக்காக நாமினேட் பண்ணனும்னு ஹவுஸ்மேட்ஸ்க்கு கொஞ்சம் சொல்லுங்க, முடிஞ்சு போன பிரச்சனை, எனக்கு ஹர்ட் ஆச்சு, மனசு கஷ்டப்படுத்துறாருன்னு மொக்கை காரணங்களுக்காக எல்லாம் நாமினேட் பண்றாங்க. முடியல பிக் பாஸ்…

இறுதியில் நாமினேட் ஆனது…. சின்னபொண்ணு, அக்ஷரா, பாவ்னி, சுருதி, இசை, அபினய், இமான், வருண், பிரியங்கா…. இதில் நாணயங்கள் வைத்திருக்கும் இசை, பாவ்னி, வருண் ஆகியோரிடம் அவற்றை நாமினேஷனை மாற்ற உபயோகப்படுத்துகிறீர்களா? என்று பிக்பாஸ் கேட்க மூவரும் இல்லை என்று ஒரே மாதிரியாக முடிவெடுத்தனர். பிக்பாஸின் கேள்விக்கு இரண்டு முறை பதில் கூறிய இசைவாணியை, ’ஒரே பதிலை ஏன்மா ரெண்டு தடவை சொல்ற… பிக் பாஸ்க்கு கேட்கும்ம்மா’ என்று அண்ணாச்சி கூற.. ’நீங்க ஏன் அண்ணாச்சி எதாவது சொல்லிட்டே இருக்கீங்க..?’ என்று இசை முகம் மாறி கேட்க, ’ஓகேம்மா நன்றி வணக்கம்’ – என்று முடித்துவிட்டார் அண்ணாச்சி. அண்ணாச்சிக்கும் இசைக்கும் என்னாச்சு?…

பாத்ரூமில் அக்ஷரா மற்றும் சின்னபொண்ணு பேசிக்கொண்டிருந்தனர். காயினனை எடுக்க முயற்சி பண்ணலையா? – என்று சின்னப் பொண்ணு கேட்க, ’இசையோட காயினை நான் எடுக்க மாட்டேன் அவ பாவம்… நிரூப், பாவ்னியோடத கிடைச்சா எடுத்துப்பேன்…’ என்று அக்ஷரா கூற, அதற்கு சின்னபொண்ணு, ’நான் போய் எப்படி எடுக்குறது, நம்மளை மக்கள் என்ன நினைப்பாங்க, நான் இப்ப நினைச்சா கூட தாமரையோடத எடுத்துடுவேன்’ – என்று கூறிகொண்டிருந்தார்…

வீட்ல இத்தனை பேர் இருந்தாலும் சின்னபொண்ணு தன்னோட எதிரியா பார்க்கிறது தாமரையைத்தான். இன்னும் சொல்லப்போனா தாமரை இந்த வீட்டைவிட்டு போனதுக்கு அப்புறம்தான் நான் போகணூம் என்பதுதான் சின்னபொண்ணுவின் அதிகபட்ச ஆசையே… விளங்கிடும்.

-சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

காட்டில் உறங்கும் யானைக் கூட்டம்… சேட்டை செய்யும் குட்டி யானை… வைரலாகும் வீடியோ

Admin

மாஸ்காட்டும் தளபதி 65.. ட்ரெண்டிங்கில் பீஸ்ட்’ 2வது போஸ்டர்!

Admin

டிவியில் நியூஸ் கேட்டபடி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ! வைரலாகும் வீடியோ

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 7: தொழிற் கை முத்திரையின் வகைகள் (17 – 20)

காங்கோ நாட்டில் புதிய தங்க மலை! மக்கள் கூடியதால் பரபரப்பு

Admin

வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்.. செய்வதறியாது திகைத்த ஒன் பிளஸ் நிறுவனம்

Admin

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

முதல் வெப் தொடரைத் தயாரிக்கும் ஏவி.எம்: வெளியானது அறிவிப்பு

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

பிக்பாஸ் நாட்கள். நாள் 13: ”காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு…”

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் 24 ‘நானும் தலைவர்தான்..!’

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment