தங்கள் பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்அப் நிறுவனம் உலகம் முழுவதும் தகவல் பறிமாற்றத்தில் முதன்மையாக உள்ளது. இதனால் நாளுக்கு நாள் அதன் பயன்பாடு அதிகரித்தது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையில் அண்மையில் மாற்றம் செய்தது.
அதன்படி, பயனாளிகளின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனத் தெரிவித்தது.
இதற்கு வாட்ஸ் அப் பயனர்கள் தரப்பில் இருந்தும், அரசு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
வழக்கின் விசாரணையின்போது, ஃபேஸ்புக் நிறுவனத்துடன் தகவல் பகிரப்படாது என வாட்ஸ்அப் உறுதியளித்ததுள்ளது