நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

SHARE

2021 ஆம் ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் தேசியத் தகுதி நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படும் நிலையில், கொரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 12 ஆம் தேதி கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 13 மாலை முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

அதேபோல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா  பரவலால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுநடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155 இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆதார் அட்டையைக் காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகள் நீக்கமா?: விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்

Admin

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

இந்தியாவுக்குள் மீண்டும் நுழைகின்றதா டிக்டாக்?

Admin

செப்டம்பர் 17 முதல் இந்த சேவை நிறுத்தம்.. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு

Admin

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் ஏன் தெரியுமா?

Admin

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் – ஹால் டிக்கெட் வெளியீடு

Admin

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

வாட்ஸ் -அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… புதிய வசதி அறிமுகம்

Admin

நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

Admin

தடுப்பூசியை வீணாக்காதீர்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

Leave a Comment