அப்போது மல்யுத்த வீரன் ..இன்னைக்கு ஈட்டி எறிதலில் தங்க மகன்.. யார் இந்த சுமித் அண்டில்?

SHARE

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் நடைபெற்று முடிந்ததையடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுமித் அண்டில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராஒலிம்பிக் போட்டியின் இன்றைய ஈட்டி எறிதல் போட்டியில் எஃப்64 பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் பங்கேற்றார்.

தனது முதல் வாய்ப்பிலேயே 66.95 மீட்டருக்கு ஈட்டி எறிந்து அவர் அசத்தினார். பின்னர், அடுத்தடுத்த வாய்ப்புகளில் முறையே, 68.08, 65.27, 66.71, 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து பிரமிக்க வைத்தார்.

இந்த நிலையில் தற்போது 5-வது முயற்சியில் 68.55 மீ. தூரம் எறிந்து மூன்றாவது முறையாக உலக சாதனை படைத்தார். இதையடுத்து இறுதிச்சுற்றின் முடிவில் அவர் வென்றதாக அறிவிக்கப்பட்டது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்தியர் சுமித் அண்டில். ஒரே போட்டியில் மூன்று முறை உலக சாதனை படைத்து அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சுமித்

சுமித் அன்டில் பெற்ற தங்கம் வென்றதால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்தை இந்திய அணி வென்றுள்ளது.

யார் இந்த சுமித்:

ஹரியானா மாநிலம் சோனிபத் பகுதியைச் சேர்ந்தவர் சுமித் தனது இளம் பருவத்தில் மல்யுத்தத்தின் மீது தீராத காதல் இருக்கவே அந்த போட்டியில் தீவிர ஆர்வம் காட்டினார்.

ஆனால் . 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் அவருடைய இடது கால் பறிபோனது. இதனால் சுமித்தின் மல்யுத்த கனவு கலைந்தது.

விபத்தில் போனது எனது கால்தான் எனது கான்வுகள் அல்ல.

விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் சுமித் மனதில் இருந்து கொண்டே இருந்தது .

இந்த நிலையில் தான்2017ஆம் ஆண்டுமுதல் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் நடத்தப்படும் என்ற செய்தி வெளியானது .

மீண்டும் சுமித்தின் கனவுக்கான விடியல் தொடங்கியது. அப்போது முதல் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று தீவிரமாக பயிற்சியை தொடங்கினார். அதில் குறிப்பாக ஈட்டி எறிதல் பிரிவை தேர்ந்தெடுத்துள்ளார்.

2019ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபேற்ற உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற பாரா தடகள போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். துபாயில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 62.88 மீட்டர் தூரம் வீசி உலக சாதனை படைத்தார். அத்துடன் எஃப்-64 பிரிவு ஈட்டி எறிதல் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தார்

தற்போது பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுமித் அண்டில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார் சுமித் .


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

தங்க மகனுக்கு எஸ்யுவி கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

Admin

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் விலகல்

Admin

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்… சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா…

Admin

யூரோ கோப்பை கால்பந்து : இத்தாலி அணி சாம்பியன்

Admin

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம் வாங்கியவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை! – காரணம் என்ன?

ஜடேஜாவை அணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசல்

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

Leave a Comment