பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக முன்னாள் மாநில நிர்வாகி கே.டி.ராகவன் விவகாரம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாரும் செய்யாததையா செய்து விட்டார் என்றும் இதில் எது அநாகரீகமானது என்றும் கவனிக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி, சீமான் பேசிய கருத்துகள் பலவாறாகப் பரவி வருகின்றன.
முதலில் அவர் பேசியது என்ன என்பதைப் பார்ப்போம்.
சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வயதையுடைய இருவரின் தனிநபர் விருப்பத்தில் தலையிடுதல் ஒருபோதும் அறம் கிடையாது. இதைப் பதிவு செய்பவர்கள் ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காக செய்திருக்கலாம். அதுவும் பொதுவெளிக்கான அறமற்ற செயல்தான். இதுதான் இந்த விவகாரத்தில் அநாகரீகமான செயல்.
சீமானும் ராகவனும் பெண்களுக்கு பேராபத்தை விளைவிப்பவர்கள் : காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆவேசம்
இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்ணோ அல்லது கே.டி.ராகவனின் மனைவியோ புகாரளித்தால் ஒழிய இது ஒரு பிரச்சினை அல்ல என்பதுதான் இதில் தேவையான புரிதல்.
அதேசமயம், கே.டி.ராகவன் செய்ததைப் போன்ற செயல்கள் கடுமையான கண்டனத்துக்குரியது என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்யாமல் விட்டது, இந்தப் பேச்சை, கே.டிராகவனுக்கு சீமான் ஆதரவு தருவதுபோலத் தவறாகப் புரிந்துகொள்ள வைக்கிறது.