மேகதாது அணைகட்டுவதில் பின்வாங்கும் பேச்சே கிடையாது: முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய்

SHARE

மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என புதிதாக பொறுப்பேற்ற கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையை கட்ட திட்டமிட்டுள்ள நிலையில் காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டதமிழக விவசாயிகளின் நலனை பேணிக்காக்க தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், எவ்வித அனுமதியும் பெறாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வருகிறது.

கர்நாடகாவில் அரசியல் நெருக்கடி காரணமாக எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பொறுப்பேற்றார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய் மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.

அணை கட்டும் விவகாரத்தில் பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அனுமதி பெறுவோம் என கூறினார்.

புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

Admin

பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை… மத்திய அரசு தாராளம்…

Admin

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!

Admin

என்ன மத்திய அமைச்சரவையில் 42% அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

மீண்டும் சிலிண்டர் விலை அதிகரிப்பு… 1000 ரூபாயை நோக்கி சிலிண்டர் விலை… அதிர்ச்சியில் மக்கள்…

Admin

ஒரே உதவி எண்: ரயில்வே அறிவிப்பு!

Admin

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

இ-ருபி பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமா் மோடி

Admin

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Admin

’எய்ம்ஸ் போல இருக்காது’ வானதி ஸ்ரீனிவாசனை சட்டப்பேரவையிலேயே கலாய்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Pamban Mu Prasanth

கொரோனாவால் இறந்தவர்களுக்கு 4 லட்சம் .. சாத்தியமற்றது – மத்திய அரசு

Admin

Leave a Comment