கீழடி அகழாய்வை நீட்டிக்க வேண்டும் : பா.ம.க ராமதாஸ் கோரிக்கை

SHARE

கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மதுரை அருகே கீழடியில் தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை நடத்தி வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ‘உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை நிரூபிக்கத் தேவையான அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது.

அதே சமயம் இதுவரை நடத்தப்பட்ட 6 அகழாய்வுகளில் 5 ஆய்வுகளின் அறிக்கை வெளியாகாதது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்குப் பிறகு மிகப்பெரிய அளவிலான அகழாய்வு சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த அகழாய்வுகளின் ஏழாம் கட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. கரோனா இரண்டாவது அலை காரணமாக அகழாய்வுப் பணிகள் சற்று பாதிக்கப்பட்டாலும், தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான பொருட்கள் அங்கு கிடைத்து வருகின்றன.

கீழடி அகழாய்வில் ஆதன், உதிரன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஓடுகள் ஏற்கெனவே கிடைத்திருந்த நிலையில், 13 எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள் இப்போது கிடைத்திருக்கின்றன. இந்த ஓடுகள் 2600 முதல் 3000 ஆண்டுகளுக்கு முன்பே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதால், தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி அறிவு பெற்றிருக்கலாம் என்ற நம்பிக்கை எழுந்திருக்கிறது. இது விரைவில் நிரூபிக்கப்படக் கூடும்.

தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நிரூபிக்க அந்த அகழாய்வு முடிவுகள்தான் அடிப்படையாக அமைந்தன. ஆனால், அதன்பின் நடத்தப்பட 5 மற்றும் 6ஆம் கட்ட அகழாய்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதைவிடக் கொடுமை 2015 முதல் 2017 வரை மத்திய தொல்லியல் துறை நடத்திய முதல் 3 கட்ட அகழாய்வுகள் குறித்த அறிக்கைகள் 6 ஆண்டுகளாகியும் வெளியிடப்படாததுதான் வேதனை.

இந்த நிலையில் தமிழர் நாகரிகம் தொன்மையானது என்று மெய்ப்பிக்கப்படுவதை சில சக்திகள் விரும்பவில்லை. அதனால்தான் கீழடி அகழாய்வுக்கு தொடக்கம் முதலே முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வந்தன.

தமிழக அரசு நடத்திய அகழாய்வின் முடிவுகள் ஓராண்டில் வெளியான நிலையில், மத்திய அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் ஆறு ஆண்டுகளாகியும் வெளிவராதது இயல்பான ஒன்றல்ல. மதுரை உயர் நீதிமன்றத்தின் கண்டிப்புக்குப் பிறகும் காலதாமதம் செய்யப்படுவதை அனுமதிக்கக் கூடாது.

கீழடி அகழாய்வின் முடிவுகளுக்காகத் தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் பத்துக் கோடிக்கும் கூடுதலான தமிழர்கள் காத்துக் கிடக்கின்றனர். எனவே, முதல் 3 கட்ட அகழாய்வு அறிக்கைகளை உடனடியாக வெளியிடும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.

5 மற்றும் 6-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கைகளை தமிழக அரசு விரைவாக வெளியிட வேண்டும்இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

”1 தொகுதிதானா? மாநிலங்களவை ல பாத்துக்குறேன்” – வைகோ சொன்னது என்ன?

Admin

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

நான் என்ன பிரதமரா? கேள்வி எழுப்பிய மதன் பதில் கொடுத்த காவல்துறை!

Admin

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு” – கமல்ஹாசனை வச்சு செய்த வானதி சீனிவாசன்

Admin

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களும் பணியைத் தொடங்கலாம்: தமிழக அரசு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து… மதிப்பெண் இப்படித்தான் வழங்கப்படும்… முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Admin

சித்திரை திருவிழா: பச்சைப் பட்டுடன் வைகையில் வந்திறங்கிய அழகர்…

Admin

இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் ரத்து – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Admin

கொரோனாவை விரட்ட .. ஏடிஎம் மீது வேப்பிலை வைக்கும் காவலாளி.. வைரலாகும் வீடியோ!

Admin

மக்களின் பொருளாதார வல்லுநர்… யார் இந்த ஜெ.ஜெயரஞ்சன்?

மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Admin

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

Admin

Leave a Comment