தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

SHARE

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக் கேப்டன் தோனியின் ஆலோசனை பலன் கொடுத்தது என்று யாக்கர் நடராஜன் புகழாரம்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வான இளம் பந்து வீச்சாளர் நடராஜன். இவரது யாக்கர் பந்து வீச்சு சிறப்பாக இருந்த காரணத்தாலும் கடந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிகபட்சமாக 71 யாக்கர்களை வீசிய பந்துவீச்சாளர் இவர் என்பதாலும், யாக்கர் நடராஜன் என்றே இவர் அழைக்கப்பட்டு வருகின்றார். தற்போது தொடங்க உள்ள ஐ.பி.எல். தொடரில் இவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.

யாக்கர் நடராஜன் கடந்த ஐ.பி.எல். தொடரில் தோனி தனக்கு அளித்த ஆலோசனை பற்றி கூறும்போது, கடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்கு எதிராக விளையாடிய போது கேப்டன் தோனி எனது பந்தை 102 மீட்டர் தூரத்துக்கு சிக்சராக விளாசினார். அதற்கு அடுத்த பந்திலேயே நான் அவரை ஆட்டமிழக்க வைத்தாலும், கடந்த பந்து எப்படி சிக்சர் போனது? என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தப் போட்டிக்குப் பிறகு தோனியிடம் பேசினேன். அவர் என்னிடம் பேசியது பெரிய விஷயம். அவர் எனது பந்து வீச்சைப் பாராட்டியதோடு ஸ்லோ பவுன்சர்கள், கட்டர்கள் ஆகியவற்றையும் வீசி பந்து வீச்சில் வேறுபாடு காட்டும்படி கூறினார். அப்போது தோனி கூறியது இப்போது பயனுள்ளதாக இருக்கின்றது என்றார்.

தன்னை அவுட் ஆக்கிய பவுலருக்கும் தோனி சிறந்த ஆலோசனையை வழங்கியதை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகிறார்கள்.
நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

சர்வதேச யோகா தினம் ..திருக்குறளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி

Admin

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

தோனியோட 7 ஆம் நம்பர் ஜெர்சி ரொம்ப முக்கியம் பாஸ் :முன்னாள் வீரர் வேண்டுகோள்.

Admin

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

மயங்கி விழுந்த நட்சத்திர வீரர்..நிறுத்தப்பட்ட யூரோகால்பந்து போட்டி!

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

Admin

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெற்ற ரவி தஹியா…ரூ. 4 கோடி பரிசு அறிவித்த ஹரியானா அரசு

Admin

Leave a Comment