உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இந்திய ஆடும் அணியில் ஜடேஜாவை சேர்த்தது தவறு என்று முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதற்கு முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் கடும் விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் இந்தியா 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி முதலிலேயே தவறு செய்துவிட்டது. மேலும் டாஸ் போடுவதற்கு ஒருநாள் தாமதமாகியும் அணியை மாற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ரவீந்திர ஜடேஜாவை இவர்கள் இடக்கை சுழற்பந்துவீச்சுக்காக அணியில் எடுக்கவில்லை. அவரை பேட்டிங்கிற்காக எடுத்தார்கள் அதுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.