அடுத்த ஆண்டிலும் சி.எஸ்.கே..?தோனி சூசகம்… ரசிகர்கள் மகிழ்ச்சி…

SHARE

ஐபிஎல் லின் 14 வது சீசன் நேற்று நடந்த இறுதிப் போட்டியுடன் கோலாகலமாக நிறைவடைந்தது.  போட்டியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கோப்பையை பெற்ற போது அளித்த பேட்டியில் தோனி சொன்ன ஒரு பதிலால் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்…

அப்படி என்னதாங்க சொன்னார் தோனி?

அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா? – என்ற கேள்விக்கு, ’அடுத்த வருடம் புதிதாக இரண்டு அணிகள் வரவுள்ளன. பிசிசியின் முடிவில் தான் என்னுடைய ஐபிஎல் பயணம் தொடர் அமையும்’ என்று தோனி கூற, அதற்கு வர்ணனையாளர், ’இது பிசிசிஐயின் பொறுப்பில் இல்லை, நீங்களும், சிஎஸ்கேவும் எடுக்க வேண்டிய முடிவு’ என்று கேட்டார்.

அதற்கு தோனி சிரித்துக்கொண்டே, ’நான் என்னை பற்றி யோசிப்பதை விட, சிஎஸ்கே பற்றிதான் யோசிக்க வேண்டும். இந்த அணி இன்னும் 10 ஆண்டுகள் சிறப்பாக அமைய வேண்டும். 2008 இல் இருந்து 2021 வரைக்கும் எப்படி சிறப்பா செஞ்சிருக்கோமோ, அதே மாதிரியான ஒரு அணியை உருவாக்கணும், என்னை விட 3 முக்கிய வீரர்களை தக்க வைத்துக் கொள்வதே நல்லது’ என்று கூற, வர்ணனையாளர் பேட்டியை நிறைவு செய்யப்போக, தோனி சிரித்துக் கொண்டே ’நான் இன்னும் பின் வாங்கவில்லை’ என்று கூறிச்சென்றார். 

இந்த வார்த்தைகளில் ’நான் இன்னும் விலகவில்லை என்றும் மீண்டும் விளையாடுவேன்’ என்று சூசகமாக தோனி கூறி உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்

மறைந்த இசை கலைஞருக்காக சிறப்பு கூகுள் டூடுள் வெளியீடு..!!

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

பஞ்சாப்பின் ஒரு கை ஓசை… விழுந்தது சென்னை அணி!.

டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம்: அரையிறுதியில் நுழைந்தார் பி.வி.சிந்து

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் 17: ‘பிரியங்காவின் போங்காட்டம்’

இரா.மன்னர் மன்னன்

அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்குது.. மஞ்சுரேக்கரை கலாய்த்த அஸ்வின்

Admin

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் விலகல்

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 21 “அபிஷேக் அவுட்”

இரா.மன்னர் மன்னன்

டிவியில் நியூஸ் கேட்டபடி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ! வைரலாகும் வீடியோ

Admin

அந்த மனசுதான் சார் தங்கம் .. குழந்தைக்கு அவசர சிகிச்சை; பதக்கத்தை ஏலமிட்ட ஒலிம்பிக் வீராங்கனை

Admin

Leave a Comment