போஸ்டர் தேதியை அறிவித்த போனி கபூருக்கே போஸ்டர்: அஜித் ரசிகர்கள் அமர்களம்…

SHARE

நமது நிருபர்.

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் போஸ்டர் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் போனிகபூர் அறிவிக்க, அவரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் 60ஆவது படமான ’வலிமை’ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனாலும் சமீப காலங்களில் வலிமை படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரிடமும் ‘வலிமை பட அப்டேட் என்ன?’ என்று கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ள தேதியை டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதில் அஜித்தின் 50ஆவது பிறந்தநாளான மே-1 அன்று படத்தின் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் போனிகபூருக்கு பல்வேறு விதங்களில் நன்றி சொல்லி வருகின்றனர். அதிலும் ஒரு அஜித் ரசிகர் போட்டோ ஷாப் மூலம் உருவாக்கப்பட்ட போஸ்டரில் ’அன்பே அமுதே ஆருயிரே போனியே… தல 60 வலிமை 3 மணிக்கு அப்டேட் செய்த சாமியே’ என்று கூறி உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

யுத்தத்தால் விடியுது சத்தத்தால் அராஜகம் அழியுது:விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Admin

நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு..!!

Admin

ஆஸ்கர் வாங்குனா என்ன? பாலகிருஷ்ணா பேட்டியால் சர்ச்சை!

Admin

ஃபேமிலி மேன் தொடரை நீக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை – அமைச்சர் தகவல்

Admin

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

எனது பிரச்சினையை தீர்த்து வைத்தவர் இவர்தான் – உண்மையை போட்டுடைத்த வடிவேலு

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

Leave a Comment