கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்…மருத்துவமனையில் அனுமதி

SHARE

நடிகை யாஷிகா ஆனந்த் பயணம் செய்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலம் ஆனார்.

இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த ஈசிஆர் சாலை சூளேரிக்காடு பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு பெண் தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடலை கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மதுபோதையில் விபத்து நடந்ததா? என்ற பாணியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இரண்டாவது வழக்கில் மீண்டும் மீராமிதுன் கைது.!!

Admin

“பிக்பாஸ்” ஓவியாவின் புதிய வெப் தொடர் இன்று ரிலீஸ்

Admin

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது. யார் அந்த பால்கே?

Admin

வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் !

Admin

டாக்டர் ரிலீஸ் தள்ளிப் போகிறது: தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

Admin

கோப்ரா ரிலீஸ் தள்ளிப்போகிறது: இயக்குநர் அறிவிப்பு

Admin

விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்.. தெறிக்கவிடும் பீஸ்ட் அப்டேட்..

Admin

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

ஸ்விகியில் ஆர்டர் செய்த நடிகை நிவேதா.. உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார்! உணவகத்திற்கு தற்காலிகத் தடை

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்… விரைவில் கைது நடவடிக்கை?

Admin

Leave a Comment