சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார் அமீர் கான்!

SHARE

நமது நிருபர்.

பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாலிவுட்டின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவரது படங்கள் நடிப்புக்கும் சமூக சிந்தனைக்கும் பெயர் பெற்றவை. இவரது லகான் படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவரது ரங் தே பசந்தி, தாரே ஜமீந் பர் – படங்கள் இந்தியாவை அதிர வைத்தன. இவரது கஜினி, பிகே – ஆகிய படங்கள் இந்திய வசூல் சாதனைகளை முறியடிக்க, இவரது தங்கல் திரைப்படம் உலக அளவில் வசூலை வாரிக் குவித்தது. இருந்தாலும் இவர் சமீபத்தில் நடித்த ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ திரைப்படத்தின் படுதோல்வி இவரைக் கடுமையாக பாதித்தும் இருந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று நடிகர் அமீர்கான் தனது 56ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதை இவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர். இந்நிலையில் இன்று தனக்கு பிறந்தநாள் தெரிவித்த ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்த அமீர்கான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து தனது ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!, எனது இதயம் நிறைந்துள்ளது. மற்றொரு செய்தி, இதுவே சமூக ஊடகத்தில் எனது கடைசி பதிவு. நான் இங்கு சுறுசுறுப்பாக இயங்கும் நிலையில் (கிண்டலாக) அதை நிறுத்த உள்ளேன். நாம் இதற்கு முன்னர் இருந்ததைப் போலவே தொடர்பு கொள்வோம். எனது அமீர்கான் புரொடக்‌ஷன் நிறுவனம் புதிய சானலைத் தொடங்கி உள்ளது. இனி அதன் மூலமாக எனது படங்களின் அப்டேட்கள் தெரிவிக்கப்படும் – என்று கூறி உள்ளார்.

https://www.instagram.com/p/CMb-N6ohCdk/

கடந்த 3 ஆண்டுகளில் அமீர்கானை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகளவில் சிறந்த 25 படங்கள்! யோகிபாபு , தனுஷ் நடித்த படங்கள் தேர்வு!

Admin

வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் !

Admin

என் வாழ்க்கையை படமா எடுத்த இவர்தான் நடிக்கணும் – தங்கமகன் நீரஜ் சோப்ரா

Admin

சிவ கார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரம்ஜான் அன்று ரிலீஸ்

Admin

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் காலமானார்!

Admin

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்து விக்னேஷ் சிவன் அப்டேட்ஸ்

Admin

தீர்ந்தது இம்சை பிரச்சனை – மீண்டும் திரையுலகில் களமிறங்கும் வடிவேலு..!

Admin

மன்னிப்பு கேட்டார் செல்வராகவன்

Admin

நடிகர் விவேக் மரணம்… விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

Admin

பரிதாபமாக காட்சியளிக்கும் சிம்பு… கௌதம் படத்திற்காக எடை குறைந்து அசத்தல்

Admin

Leave a Comment