கோப்ரா ரிலீஸ் தள்ளிப்போகிறது: இயக்குநர் அறிவிப்பு

SHARE

நமது நிருபர்.

நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப் போவதாக இயக்குநர் அறிவிப்பு.

நடிகர் விக்ரம் நடிப்பில், இமைக்கா நொடிகள் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் கோப்ரா. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தில் இர்பான் பதான் தமிழுக்கு நடிகராக அறிமுகமாகிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், மியா ஜார்ஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் இந்தத் திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்கள் முன்பு ரஷ்யாவில் நிறைவடைந்தது. தற்போது சென்னையில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்தத் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், படம் மே மாதம் ரம்ஜான் திருநாளை ஒட்டி வெளியாகும் என்றே திரைப்படக் குழு கூறி வந்தது.

ஆனால் பின்னணிப் பணிகள் அதற்குள் முடியாது என்ற நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாத்தில்தான் இருக்கும் என்று படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தற்போது கூறி உள்ளார். இது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், கொரோனா சூழலில் படத்தின் படப் பிடிப்பு நிறைவடைந்ததே ரசிகர்களுக்கு ஆறுதலாகத்தான் உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் காலமானார்!

Admin

டாக்டர் ரிலீஸ் தள்ளிப் போகிறது: தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன்… குவியும் எம்ஜிஆர் ரசிகர்கள்…

Admin

யூடியூப்பை தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’ – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Admin

மாஸ்காட்டும் தளபதி 65.. ட்ரெண்டிங்கில் பீஸ்ட்’ 2வது போஸ்டர்!

Admin

வழியெங்கும் வாக்குவாதம்… சென்னை கொண்டு வரப்பட்டார் மீரா மிதுன்…

Admin

சிவ கார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரம்ஜான் அன்று ரிலீஸ்

Admin

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிக்பாஸ் பிரபலம் !! நலமுடன் இருப்பதாக விளக்கம்!!

Admin

மிரட்டலாக வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் டைட்டில் லுக்… இயக்குனர் யார் தெரியுமா..?

Admin

நடிகர் சோனுசூட்டை காண ரசிகர் செய்த அதிர்ச்சி சம்பவம்..!

Admin

Leave a Comment