நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா?

SHARE

நமது நிருபர்.

1960களில் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் 190 படங்களுக்கும் மேல் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜமுனா. தெலுங்குத் திரையுலகிற்கு மிகவும் பரிச்சயமான இவர் தமிழில் தங்கமலை ரகசியம், தெனாலி ராமன், தாய் மகளுக்கு கட்டிய தாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

கன்னடத்தைத் தாய்  மொழியாகக் கொண்ட இவர் தெலுங்குத் திரையுலகில்தான் வெற்றிகரமான கதாநாயகியாக விளங்கினார். 16 வயதிலேயே கதாநாயகியான இவர், திரைப்படத்தில் நடிப்பதைத் தவிர இயக்குநராகவும் திகழ்ந்தவர் . பின்னாட்களில் அரசியலிலும் ஈடுபட்டார்.

தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்களாக வந்து சக்கைபோடு போடுகின்றன. சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’சஞ்சு’, சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகா நடி’ ஆகியவை இந்திய அளவில் பெரும் வசூலைப் பெற்றவை. அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணவத் நடிக்கும் ’தலைவி’ படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில் தெலுங்குத் திரைப்படத் துறையினர் ஜமுனாவின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்க முயற்சி செய்து வந்தனர். இவர்கள் நடிகை தமன்னாவிடம் பேசி ஜமுனாவாக நடிக்க தமன்னாவின் ஒப்புதலைப் பெற்றுவிட்டதாகவும், அந்தப் படம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தொடர்புடைய வட்டாரங்களில் செய்திகள் உலவுகின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆஸ்கர் வாங்குனா என்ன? பாலகிருஷ்ணா பேட்டியால் சர்ச்சை!

Admin

40 கல்யாணம் பண்ணுவேன் நான்: வனிதா பரபரப்பு பேட்டி!

Admin

அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த் அறிக்கை

Admin

இப்படியெல்லாம் சீரியல் எடுத்தா ஜெயில் தான்… அதிர வைத்த திருவள்ளூர் எஸ்.பி.,

Admin

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin

முதல் வெப் தொடரைத் தயாரிக்கும் ஏவி.எம்: வெளியானது அறிவிப்பு

Admin

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்து விக்னேஷ் சிவன் அப்டேட்ஸ்

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்… திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதி

Admin

இரண்டாவது வழக்கில் மீண்டும் மீராமிதுன் கைது.!!

Admin

Leave a Comment