நடிகர் விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி… ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு

SHARE

அமேசான் பிரைம் தளத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக் கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் ஓடிடி தளத்திலும் வெளிவர தொடங்கியுள்ளது.

அந்த வகையில் லோல் (Last One Laughing) என்ற நகைச்சுவை நிகழ்ச்சி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி வருகிறது.இதில், பத்து நகைச்சுவையாளர்கள் ஒரு அறையில் தங்க வைக்கப்படுவார்கள். ஒருவருக்கொருவர் மற்றவர்களைச் சிரிக்க வைக்க வேண்டும். பத்து நகைச்சுவையாளர்களில் கடைசியாக யார் சிரிக்கிறார்களோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

சக போட்டியாளர்களின் நகைச்சுவைகளுக்குச் சிரிக்காமல், உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் இருப்பது கடினம் என்பதால் இந்தப் போட்டி பல நாடுகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழில், விஜய் தொலைக்காட்சியில் ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு சுற்றில் இதுபோல ஒரு நிகழ்ச்சி ஏற்கெனவே வெளியானது. அதில் போட்டியாளர்களைச் சிரிக்க வைக்க ஒருவர் முயற்சி செய்வார். சிரிக்காமல் கடைசி வரை இருப்பவருக்கு அதிக புள்ளிகள் வழங்கப்படும்.

ஹிந்தியில் உருவாக்கப்பட்ட லோல் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதக் கடைசியில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.இந்நிலையில், லோல் நிகழ்ச்சி தற்போது தமிழிலும் வெளியாகவுள்ளது.

‘லொல்: எங்க சிரி பார்ப்போம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை மறைந்த நடிகர் விவேக்கும், நடிகர் சிவாவும் தொகுத்து வழங்கியுள்ளனர்.

ஆறு எபிசோடுகளைக் கொண்ட இந்த நிகழ்ச்சி அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் 27 ஆம் தேதி வெளியாகிறது. அதுகுறித்த ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

பிரேம்ஜி, பவர்ஸ்டார் சீனிவாசன், ஆர்த்தி, புகழ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், சதீஷ், அபிஷேக் குமார், மாயா கிருஷ்ணன், ஷியாமா ஹரிணி, பேகி ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்து விக்னேஷ் சிவன் அப்டேட்ஸ்

Admin

வன்கொடுமை வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

ரூ.1.3 கோடிக்கு கார்!: குக் வித் கோமாளி குழுவினர் குதூகலம்…

Admin

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் : மேல்முறையீடு செய்கிறாரா நடிகர் விஜய்?

Admin

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin

சூர்யா – கார்த்தி முதன்முதலாக எடுத்துக்கொண்ட செல்பி.. இணையத்தில் வைரல்

Admin

கோப்ரா ரிலீஸ் தள்ளிப்போகிறது: இயக்குநர் அறிவிப்பு

Admin

டெடியாக நடித்தது இவர்தான்: புகைப்படம் வெளிட்ட ஆர்யா

Admin

நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு..!!

Admin

90-களின் பேவரைட் தொகுப்பாளர், திடீர் மறைவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Admin

Leave a Comment