தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது இதில் காரசாரமான வாத விவாதங்கள் இடம்பெற்று வருவதோடு அரசின் நிர்வாகக் குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு விளக்கமளித்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து எழுந்து பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அப்போது, தங்கம் தென்னரசு ஆற்றிய உரைக்கு வாழ்த்துகள் தெரிவித்ததோடு, “ பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க தவறியது ஏன்” என்றும் தங்கம் தென்னரசைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவர்,
“கோவையில் நூலகம் அமைக்கப்படுவது குறித்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, எப்போது கட்டத் தொடங்குவீர்கள்? எவ்வளவு நிதி ஒதுக்குவீர்கள்? எங்கு இந்த நூலகம் அமையவிருக்கிறது? எப்போது முடிப்பீர்கள்” என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார். எப்படி மதுரையிலே நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கிங்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறதோ, ஒன்று மட்டும் வானதி சீனிவாசன் அவட்ர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது, மதுரையிலே எய்ம்ஸ் அறிவித்ததைப் போல, நிச்சயமாக இல்லாமல், இந்தப் பணிகள் முறைப்படி நடைபெறும்.”
”நான் தேதியே குறிப்பிடுகிறேன். 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் திறக்கப்பட்டு விடும். அதன் தொடக்க விழாவுக்கும் முறைப்படி உங்களுக்கு அழைப்பு வரும்.ங்களுக்கு அழைப்பு வரும். நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.