ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது மகனை விடுதலை செய்யக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் எனது மகன் 30 ஆண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறான்.
அவனுக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளதால், மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படுகிறது, சிறையில் அது சரிவர கிடைப்பதில்லை – என்று தாயார் அற்புதம்மாள் வேதனை தெரிவித்தார்.
மேலும், தனது மகன் பேரறிவாளன் குற்றவாளி இல்லை என கூறிய ஐபிஎஸ் அதிகாரி தியாகராஜன், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஆகையால் தனது மகனை விடுதலை செய்ய முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கிறேன் எனக் கூறினார்.
இந்நிலையில் தாயார் அற்புதம்மாள் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், “இந்த தாயின் 31 ஆண்டு கால போராட்டத்திற்கு நீதி வழங்கப்படுவதற்கான அதிக நேரம் இது” என குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இருந்த 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
– மூவேந்தன்