அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

SHARE

விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப்பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 வயது மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வருத்தம் தெரிவித்ததோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்சேவூர்(ம) அம்மன் குளத்துமேடு கிராமத்தில் நேற்று (21.2.2024) மாலை TN-32-N-3938 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்து சாலை வளைவைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த அம்மன் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வன் பிரவீன் குமார் (16) த/பெ.அன்பழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வன் வீனேஷ் (16) த/பெ.ஜெயராஜு என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்”என தெரிவித்துள்ளார். 


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச உணவு – அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

Admin

இ -பதிவில் தவறான தகவல் அளித்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.. தமிழக அரசு எச்சரிக்கை

Admin

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

உதவி கேட்ட பவானி…கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Admin

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு… சிறப்பு டிஜிபிக்கு ஜாமின்

Admin

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு: எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Admin

அடுத்த 5 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ இலவசம் – அதிரடி அறிவிப்பு

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

விவிபேட் வேண்டாம்… ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Pamban Mu Prasanth

Leave a Comment