தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

lok sabha election polls 2024
SHARE

நாடாளுமன்றத் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் நாளை (பிப்ரவரி 20) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குழுவுடன் தமிழ்நாடு வரவுள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்றதேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க, அடுத்த 2 நாட்கள் முகாமிட்டு ஆலோசனை நடத்தப்போவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார்



அடுத்த 2 நாட்களின் திட்டம் என்ன?

குழு பிப்.23ம் தேதி காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறது. இரண்டு நாட்கள் இந்த குழுவினர் தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.

சென்னை கிண்டியில், காலை 11.30முதல் பிற்பகல் 1 மணிவரை, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி, அவர்களின் பரிந்துரைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெறுகின்றனர்.

தொடர்ந்து, பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ முன்னிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளான சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் இதர மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை பொறுப்பு அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் நேரடியாகவும், காணொலிவாயிலாகவும் அந்தந்த மாவட்ட தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அறிவுறுத்தல்களை வழங்குகின்றனர்.

மறுநாள் 24-ம் தேதி காலை, 9 முதல் 11 மணிவரை தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை பொறுப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

அப்போது, தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தங்கள் மாநிலங்களின் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களை வழங்குகின்றனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை, வருமான வரி, வருவாய் புலனாய்வு, போதைப் பொருள் தடு்ப்பு பிரிவு, சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

தொடர்ந்து, பிற்பகல் 2 மணி முதல், 3 மணிவரை தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்திவிட்டு, அன்று மாலையே டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

Admin

“தல-தளபதி” சந்திப்பு – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Admin

தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு : மு.க.ஸ்டாலின்!

Admin

இ-ருபி பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமா் மோடி

Admin

பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்… பாஜக சார்பில் போலீசில் புகார்

Admin

அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

Pamban Mu Prasanth

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனை

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

Admin

‘ஏ..தள்ளு..தள்ளு’ – பழுதான ரயிலை தள்ளிக்கொண்டு சென்ற மக்கள்

Admin

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

Leave a Comment