எல்லாமே டெல்லிதான் சொல்லுமா? 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அமல்

SHARE

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி விட்டன.

தமிழகத்தை பொறுத்தவரை புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக அரசு நிற்கிறது. இந்த சூழலில் புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை படிப்படியாக நாடு முழுக்க இன்ந்திய அரசு அமல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது, 3, 4,5 ஆகிய வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதலே பூதிய கல்விக்கொள்கையின் படி பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது இந்திய கல்வி அமைச்சகம்.

அதன்படி, முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க 6 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். யூ.கே.ஜி வகுப்புக்கும் 5 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் ஆகிய அறிவுறுத்தல்கள் குறிப்பிடப்பட்டன.



அத்துடன், “வரும் கல்வியாண்டு முதலே 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கு புதிய கல்விக்கொள்கையின் படியான பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்” என்று இந்திய கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டே 2 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு விட்டது. தமிழ்நாடு இந்த கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிக்கைகள் வெளியிட்டதோடு மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு மௌனமாக எதிர்ப்பைப் பதிவு செய்தபடி, புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்திவிட்டது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன. இதுகுறித்து, மெய்யெழுத்துடன் பேசிய கோவையைச் சேர்ந்த கல்வியியலாளர் ஈஸ்வரன், “ஒருபோதும் இதை அமல்படுத்தக் கூடாது ” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ பாடத்திட்டம் என்பது அந்தந்த மாநிலங்களுக்குட்பட்ட அறிவுசார் செயல்பாடாக இருக்க வேண்டுமே ஒழிய, இந்திய அரசாங்கம் இதை ஓர்மைப்படுத்த நினைப்பதன் நோக்கம் என்ன? தமிழ்நாடு அரசு நிச்சயமாக இதை அமல்படுத்தாது என்று நம்புகிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தங்கள் நிலப்பரப்புக்கேற்ப பாடத்திட்டத்தை உருவாக்கும் அங்கீகாரம் இருக்க வேண்டியது அவசியம். எல்லாவற்றையும் டெல்லியில் அமர்ந்து கொண்டு இந்திய அரசுதான் முடிவு செய்யும் என்றால் எதற்காக மாநிலங்கள் என்ற அமைப்பு இருக்க வேண்டும்? எங்கள் குழந்தைகள் எங்கள் கிராமங்களில் என்ன படிக்க வேண்டும் என்பதை டெல்லியில் அமர்ந்து கொண்டு 10 பேர் முடிவு செய்வார்கள் என்றால் பிரச்னைகள் தான் அதிகரிக்கும்.

ஈஸ்வரன் வேலுச்சாமி, கல்வியியலாளர்

அதிகாரப் பகிர்வு இல்லாமல் போனால் நிறைவான வளர்ச்சி இருக்காது. பஞ்சாயத்து நிர்வாகம், வங்கிகளில் கல்விக்கடன்ன் வழங்கும் அதிகாரம் ஆகியவற்றில் அதிகாரங்களை பகிர்ந்தளித்தன விளைவாக வளர்ச்சியை ஏற்கனவே தமிழ்நாடு அரசு கண்டுள்ளது. கல்விக்கொள்கை விவகாரத்திலும் மாநிலங்களுக்கு அந்த உரிமை அவசியம்” என்று தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைனில் மது விற்பனை – அமைச்சர் கூறியது என்ன?

Admin

மாஸ்காட்டும் தளபதி 65.. ட்ரெண்டிங்கில் பீஸ்ட்’ 2வது போஸ்டர்!

Admin

‘ஊரை ஏமாற்றும் அண்ணாமலையே..ராஜினாமா செய்’- ஜோதிமணியின் காட்டமான அறிக்கை

Admin

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்… கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

Admin

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

Admin

மோடி ஆட்சிக்கு ஒரு கோடி கும்பிடு… வைரலாகும் புகைப்படங்கள்…

Admin

தம்பி வா… தலைமையேற்க வா.. சர்ச்சையில் விஜய் போஸ்டர்!

Admin

ஊரடங்கில் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Admin

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

பழனிசாமி தலைமையில் கூட்டம்… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

Admin

Leave a Comment