9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்… கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

SHARE

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. புதிய மாவட்டங்கள் பிரிப்பு,வார்டு வரையறை பணிகள் முடிவடையாதது காரணமாக 9 மாவட்டங்களில் தேர்தல் இதுவரை நடக்கவில்லை.

இதனிடையே செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன் வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

தலைவர்களை புகழ்ந்து பேச தடை போட்ட முதல்வர்… காரணம் என்ன?

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியிலும் பயமில்லை: முன்னாள் அமைச்சர் தங்கமணி !

Admin

தேர்தல் நடக்கும் ..பதவி ஏற்பு விழா நடக்கும் ..கிராம சபை மட்டும் நடக்காது : ம.நீ. ம. தலைவர் கமல்ஹாசன்

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

விரைவில் முதலமைச்சராகிறாரா உதயநிதி? – சட்டப்பேரவையில் அமைச்சர் எவ. வேலு சூசகம்

Admin

என்ன மத்திய அமைச்சரவையில் 42% அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

Leave a Comment