இந்த முறையும்கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தடை ..காரணம் என்ன?

SHARE

கொரோனா பரவல் இருப்பதால் சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், ஜன. 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆக.15 சுதந்திர தினம், அக். 02 காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில், கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஓரு வருடமாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. .

இந்த நிலையில்,வரும் 15-ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

பஞ்சாயத்து தலைவர்களுக்கு இது குறித்த உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தன் ட்விட்டர் பதிவில் கொரோனா பாதுகாப்பு விதிகளை காரணமாகச் சொல்லி, கிராம சபை கூட்டங்களை ரத்துச் செய்வது சரியல்ல.

உரிய பாதுகாப்பு விதிகளை உருவாக்கி, கிராம சபை கூட்டங்களை நடத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என கூறியுள்ளார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இயக்குநரின் மனைவி கொரோனாவுக்கு பலி: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?

Admin

வாட்ஸ் அப் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

செப்டம்பர் 15- வரை ஊரடங்கு நீட்டிப்பு : எவற்றுக்கெல்லாம் தடை

Admin

தனுஜாவை தொடர்ந்து போலீசாருடன் தகராறு செய்த மற்றொரு வழக்கறிஞர்!

Admin

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

நீட் தேர்வில் விலக்கு…புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல்..

Admin

பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

மதுரை எய்ம்ஸ் பணிகளை தொடங்குக – பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்..!

Admin

ட்விட்டரைக் கலக்கும் புறக்கணிப்போம் புதியதலைமுறை

Pamban Mu Prasanth

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – இந்த 11 ஆவணங்களில் ஒன்று போதும்

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

Leave a Comment