மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணியினை கலைத்துவிட்டு ஆட்சியை பிட்டிக்க வேண்டுமென பாஜக அதிகார வெறி பிடித்து திரிவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இணைய வழியாக செய்தியாளர்களை சந்தித்தார். அதில், கொரோனா காலத்தில் மக்களின் உயிர் தான் முக்கியம். தற்போது மகாராஷ்டிர மாநிலம் கொரோனா தொற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால் , இந்த கொரோனா காலத்திலும் சில கட்சிகள் மாநில அரசிற்கு நெருக்கடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க நினைக்கின்றன – என்று அவர் கூறினார்.
இவ்வாறுஅதிகார வெறிப்பிடித்து அலைவது, சட்ட ஒழுங்கை பாதிக்க வழிவகுக்கும் என ஆளும் பாஜக அரசினை உத்தவ் தாக்ரே மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்