ஜூலை 31 வரை ஊரடங்கு: புதிய தளர்வுகள்என்ன ?

SHARE

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பினை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை தொடர்வதாக ஒரு சில கட்டுப்பாடுகளையும் தளர்வுகளை அவர் அறிவித்துள்ளார். திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தடை தொடரும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்

தமிழகத்தில், 25-3-2020 முதல் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது .

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு வழங்கியுள்ளது

அனுமதி:

 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதி.

இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதி.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிh

. தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு-சுருக்கெழுத்து, பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி

. பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி

 அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் பின்வரும் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

 கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள், ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வீல்சேரில் விஜயகாந்த்.. சோகத்தில் ரசிகர்கள்…

Admin

ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…!

Admin

அமைச்சர் சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுத தயாரா? – அண்ணாமலை கேள்வி

Admin

ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு சேர்த்த ட்விட்டர் நிறுவனம்…!

Admin

தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கிற கடையை பூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி 

Pamban Mu Prasanth

தேர்தல் நடக்கும் ..பதவி ஏற்பு விழா நடக்கும் ..கிராம சபை மட்டும் நடக்காது : ம.நீ. ம. தலைவர் கமல்ஹாசன்

Admin

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்; ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

Leave a Comment