வீல்சேரில் விஜயகாந்த்.. சோகத்தில் ரசிகர்கள்…

SHARE

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் சென்ற நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகரும்,தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், தேமுதிக பொதுக் கூட்டங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் அவர் தவிர்த்து வந்தார்.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட தன்னை யாரும் நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டு சிகிச்சையை தவிர்த்து வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைகளை செய்து வந்தார்.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக இன்று காலை விஜயகாந்த் விமானம் மூலம் துபாய் சென்றார். விமான நிலையத்தில் அவரை உதவியாளர்கள் வீல் சேரில் வைத்து வேகமாக தள்ளிக் கொண்டே சென்ற புகைப்படங்கள் தேமுதிக தொண்டர்கள் உட்பட தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Admin

ரூ.900-ஐ தாண்டிய சிலிண்டர் விலை .. இல்லத்தரசிகள் அதிர்ச்சி !

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

ஜல்லிக்கட்டை மீட்டுக் கொண்டுவந்தது நாம்தான்: பிரதமர் நரேந்திர மோடி

Admin

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி.. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியோர், புகழேந்தி அதிரடி நீக்கம்

Admin

கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

Leave a Comment