அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்; ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

SHARE

தேச நலன் மற்றும் தமிழ்நாட்டின் நலன் கருதி பாஜக உடனான அதிமுக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து பாஜகவும், அதிமுகவும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகிறது.சமீபத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்தார்.

இதற்கு பாஜகவின் கேடி ராகவன் பதிலடி கொடுத்திருந்தார்.இந்த கருத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், பாரதிய ஜனதா கட்சி மீதும், பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணி தொடர்பாக எவ்வித மாற்றுத் கருத்திற்கும் இடமில்லை என்றும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Admin

எல்லாமே டெல்லிதான் சொல்லுமா? 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அமல்

Pamban Mu Prasanth

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

“வேளாண் பட்ஜெட் இப்படித்தான் இருக்கும்” – அமைச்சர் விளக்கம்

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

நீட் தேர்வில் விலக்கு…புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல்..

Admin

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

வாட்ஸ் அப் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

Leave a Comment