சுமார் 20 ஆண்டுகள் ஆப்கானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்படைகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி அதாவது நேற்றுடன் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது.
இந்த நிலையில்அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்:
அமெரிக்க ராணுவ படை 1,20,000 அமெரிக்க குடிமக்கள், நட்பு நாடுகளின் குடிமக்களை பத்திரமாக மீட்டுள்ளது. நாம் எவ்வளவு விரைவாக முடிக்கிறோமோ, அவ்வளவு நல்லது எனக் கூறினார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பதால், மக்களை விரைவாக வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினார்.
அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அதிபர் ஜோ பைடன் என்னப் பேசப் போகிறார் என்பதை அறிய அமெரிக்கர்கள் மட்டுமல்லாது காபூலில் காத்திருந்த ஏராளமானோர் காத்திருந்த நிலையில் பைடனின் பேச்சு ஆப்கான் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.