காட்டில் உறங்கும் யானைக் கூட்டம்… சேட்டை செய்யும் குட்டி யானை… வைரலாகும் வீடியோ

SHARE

ஆதிகாலம் முதலே நமக்கும் யானைகளுக்கும் ஒரு பந்தம் உள்ளது. அந்த வகையில் சீனாவின் நகர் பகுதியில் திரிந்த யானைகள் தங்கள் குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் வீடியோ இணையத்தில் மக்களால் ஈர்க்கப்பட்டு வைரலாகி வருகின்ரது.

சீனாவில், நகர் பகுதிகளுக்குள் சுற்றித்திரிந்த யானைகள் கூட்டம் ஓய்வெடுத்த புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.

வனப்பகுதிகளில் உணவின்றி தவித்த 15 காட்டு யானைகள், அண்மையில் சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள நகர் பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.

இதைத்தொடர்ந்து அவற்றை விரட்டி அடித்த கிராம மக்கள், அரசு அதிகாரிகள் உதவியுடன் டிரோன் மூலம் கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் சுமார் 500 கிலோ மீட்டர் ஒய்யார நடையிட்ட இந்த காட்டு யானைகள் அங்குள்ள வனப்பகுதியில் படுத்துறங்கி ஓய்வெடுத்த காணொலி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதிலும் அந்த குட்டியானை மாட்டும் தூங்காமல் தனது தாயிடம் குறும்பு செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

மனிதர்களைப் போலவே குடும்ப அமைப்பு முறை, மரியாதை, இறுதி வணக்கம் ஆகிய மூன்றையும் கொண்டவை யானைகள். அவற்றை எதிரிகளாக நினைக்கும் அளவுக்கு மனிதர்கள் மாறிவிட்டார்கள், ஆனால் யானைகள் மாறவில்லை என்பதையே இந்தக் காட்சி நமக்கு உணர்த்துகின்றது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிரிக்க வைக்கிறதா அமேசானின் ‘எங்க சிரி பார்ப்போம்’ ரியாலிட்டி ஷோ?

நான் தான் அப்பவே சொன்னேனே.. சீனாவை வம்பிழுக்கும் டிரம்ப்!

Admin

பருவநிலை மாற்றத்தால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து…!

Admin

பிக் பாஸ் நாட்கள்: நாள் 16: ‘நான் ஜெயிலுக்குப் போறேன்’

இரா.மன்னர் மன்னன்

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

தாலிபான்கள் ஆட்டம் ஆரம்பம்: விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை

Admin

ஆப்கானில் அதிகரிக்கும் தலிபான்களின் ஆதிக்கம்!

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

ஆப்கன் பெண்கள் உரிமைகள் கேட்டு சாலையில் போராட்டம்.!!

Admin

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

Leave a Comment