1928ல் செல்போனா? – சாப்ளின் படத்தின் விநோத காட்சி!.

SHARE

உலக வரலாற்றின்படி முதன் முதலாக செல்ஃபோன் பயன்படுத்தப்பட்டது 1973ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டின் ஏப்ரல் 3ஆம் நாளில் மோடரோலா நிறுவனத்தின் ஊழியர் மார்ட்டின் கூப்பர் என்பவர் மன்ஹாட்டன் தீவில் இருந்து முதன் முதலாக செல்ஃபோனைப் பயன்படுத்தி அழைத்தார், அந்த அழைப்பை நியூ ஜெர்சியில் உள்ள பெல் ஆய்வுக் கூடத்தின் தலைமை நிலையத்தினர் எடுத்தார்கள்.

இந்தியாவில் முதல் செல்போன் அழைப்பு 1995ஆம் ஆண்டில் ஜூலை 31ஆம் தேதி அன்றைய மேற்கு வங்க மாநில முதல்வர் ஜோதி பாசு அவர்களால் மேற்கொள்ளப்பட்டது, மறுமுனையில் அன்றைய தகவல் தொழில்நுட்பத்துறை மத்திய அமைச்சர் சுக்ராம் பேசினார்.

இதையெல்லாம் இங்கு சொல்லக் காரணம் தற்போது இணையவாசிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ள ஒரு திரைப்படக் காட்சிதான். உலகின் ஈடு இணையற்ற நடிகர்களில் ஒருவரான சார்ளி சாப்ளின் நடிப்பில் வந்த ‘தி சர்க்கஸ்’ என்ற படத்தில் போகிற போக்கில் வரும் அந்தக் காட்சியில், ஒரு பெண் தன் கையில் எதையோ வைத்திருக்கிறார், அதைத் தனது காதில் வைத்து பேசியபடியே அவர் செல்கிறார்.

பெண்ணில் கையில் தெளிவற்று தெரியும் அந்தப் பொருள் ஒரு செல்ஃபோனாகத்தான் இருக்க வேண்டும் என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்கின்றனர் இணையதளவாசிகள். இதை ஏற்றுக் கொள்வதில் உள்ள ஒரே சிக்கல் ‘தி சர்க்கஸ்’ திரைப்படம் 1928ல் வெளிவந்தது என்பது மட்டும்தான்!.

அந்தப் பெண்ணின் கையில் உண்மையில் இருந்தது என்ன? ஏன் அதை வைத்து காதில் பேசுவது போல அவர் நடந்து கொண்டார்? – என்ற விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை. மேற்கத்திய நாடுகளின் அந்தக் கால கலைப் பொருட்களைச் சேகரிப்பவர்கள் ‘அது காது கேட்கும் கருவியாக இருக்கலாம், 1920களில் அந்தக் கருவி மட்டுமே கைக்கு அடக்கமாக இருந்தது’ என்று கூறுகிறார்கள்.

இந்த ஊகமும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எது எப்படி இருந்தாலும் அந்தக் காட்சியை  நாம் இன்றைக்குப்ப் பார்க்கும் போதும் செல்ஃபோன் நம் நினைவுக்கு வந்து செல்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை!.

– இரா.மன்னர் மன்னன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

செல்போனை முழுங்கிய இளைஞர்… சாமர்த்தியமாக காப்பாற்றிய மருத்துவர்கள்

Admin

பொழுதுபோக்குக்காக பறப்பவர்களை விண்வெளி வீரர்கள் என கூறமுடியாது :கடுப்பான அமெரிக்கா!

Admin

ஆப்கானிஸ்தானில் ஜாலியாக ராட்டினம் ஆடி மகிழும் தாலிபான்கள்

Admin

இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

Admin

மலேரியாவுக்கு தடுப்பூசி… 30 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி!.

டெல்டா கொரோனா பெரும் சவால் – அமெரிக்க மருத்துவ நிபுணர் தகவல்

Admin

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலை… ஆதாரம் கொடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் உயரிய ஊடக விருது!.

Admin

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

கூடிய சீக்கிரம் டெல்டா கொரோனா உலகை ஆக்கிரமிக்கும்: எச்சரிக்கும் WHO

Admin

3-வது திருமணத்துக்கு தயாரான பிரபல பாடகி..!!

Admin

அதிபராக இருந்தால் என்ன தப்புதான் : அதிரடி நடவடிக்கை எடுத்த யூடியூப்!

Admin

Leave a Comment