டெல்டாவை விட பயங்கரமான வைரஸ் தோன்றலாம் :உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

SHARE

டெல்டாவை விட வீரியம் நிறைந்த வைரஸ் தோன்றலாம் உலகசுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

சீனாவில் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.

தற்போதைய உருமாற்றம் ஆன டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் போன்ற வைரஸ்கள் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

உலகளவில் கடந்த 4 வாரங்களில் கொரோனா பாதித்தவர்களில் 75% பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக உறுதி செய்யப்பட்ட டெல்டா வகை கொரோனா, 124 நாடுகளில் இருந்த நிலையில் மேலும் 14 நாடுகளுக்கு இந்த வகை கொரோனா பரவியுள்ளது.

உருமாற்றமடைந்த ஆல்பா, பீட்டா, காமா வகை கொரோனாவை காட்டிலும் டெல்டா வகை மிக வேகமாக பரவும் என்றும் அனைத்து நாடுகளிலும் இன்னும் சில மாதங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தப்போவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் டெல்டாவை விட வீரியம் நிறைந்த மற்றொரு வைரஸ் தோன்றலாம் என்றும் அந்த வைரஸ் இதைவிட ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு.!!

Admin

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

ஆப்கானில் ஓசாமாவை அழிப்பதே எங்கள் வேலை .. என்னோடு இந்த போர் முடியட்டும்: அமெரிக்க அதிபர் ஜோபைடன்

Admin

மனித ரத்தத்திலும் நுழைந்த பிளாஸ்டிக்! – உலகை உலுக்கிய ஆய்வு முடிவு!

நான் தான் அப்பவே சொன்னேனே.. சீனாவை வம்பிழுக்கும் டிரம்ப்!

Admin

ஊக்கமருந்து சோதனையில் சீனா வீராங்கனை :மீராபாய் சானுக்கு தங்கம் கிடைக்குமா?

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

ஆப்கானில் போராளி குழுக்களுடனான சண்டையில் 600 தாலிபான்கள் பலி

Admin

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

வெளியேறிய அமெரிக்கா கால்பதிக்கும் தாலிபன்கள்..யார் இந்த தாலிபான்கள் ? அவர்களின் நோக்கம் என்ன?

Admin

Leave a Comment