தங்கப்பதக்கம் வென்ற எலி… பணியில் இருந்து ஓய்வு

SHARE

கம்போடியாவில் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து தங்கப்பதக்கம் வென்ற எலி தனதுபணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது.

மகாவா (MAGAWA) என்ற எலி 7 ஆண்டுகளாக கண்ணி வெடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இதுவரை 39 கண்ணி வெடிகளையும், 28 வெடிக்காத குண்டுகளையும் கண்டுபிடித்துள்ளது. மகாவா வகை எலியானது வீடுகளில், வயல்களில் காணப்படும் எலி அல்ல மாறாக ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெரிய ரக எலி.

கம்போடியாவில் மாகாவா செய்யும் உயிர்காக்கும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் , பிரிட்டனைச் சேர்ந்த கால்நடைகளுக்கான அறநிறுவனம் கடந்த ஆண்டு எலிக்கு தங்கப் பதக்கம் வழங்கியது.

மகாவா எடை குறைவாக இருப்பதால், கண்ணிவெடிகள் இருக்கும் இடத்தை அதனால் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்க முடியும். கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதற்காக அதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

மகாவா எலி 7 ஆண்டுகளாக கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் அதற்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் சுமார் 80 மில்லியன் வெடிக்கக்கூடிய கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இருக்கும் இடம் கண்டறியப்படவில்லை என்றும் PDSA அறநிறுவனம் தெரிவித்தது . கம்போடியாவில் மட்டும் 4 முதல் 6 மில்லியன் கண்ணிவெடிகள் உள்ளன, அவற்றுள் 3 மில்லியன் கண்ணிவெடிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தாலிபான்களுக்கு தண்ணி காட்டும் தீவிரவாத அமைப்பு… அதிர்ச்சியில் உலக நாடுகள்…

Admin

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் : காரணம் என்ன?

Admin

கச்சேரி மேடையான சலூன் கடை : வைரலாகும் வீடியோ!

Admin

ஆப்கானில் உள்ள இந்தியர்கள் விரைவில் மீட்பு: இந்திய வெளியுறவுத்துறை தகவல்

Admin

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

ஏன் இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி கொடுக்கலை தெரியுமா? அமெரிக்கா விளக்கம்!

Admin

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

மாஸ்க் போடாத பிரதமருக்கு அபராதம்! – தாய்லாந்தில் சம்பவம்

சீக்கிரமே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் அதான் நல்லது: ஜோ பைடன் பேச்சு

Admin

வெள்ளை மாளிகையையே விற்ற திருடன்!.

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

Admin

Leave a Comment