அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலை… ஆதாரம் கொடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் உயரிய ஊடக விருது!.

SHARE

கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமெரிக்கா காவல்துறையினரால் துன்புறுத்தி கொல்லப்பட்டபோது அதனை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மே மாதம் 25 ஆம் தேதி அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்தது, உலகளவில் பெரிதாக பேசப்பட்டது.டெரிக் சாவின் என்ற காவல் அதிகாரி, ஜார்ஜ் பிளாய்ட்டை கழுத்தில் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில் அவர் உயிரிழந்தார்.

இதனை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண் (வயது 17). ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய மிக முக்கிய காரணமாக அந்த வீடியோ தான் இருந்தது. உலகம் முழுவதும் பரவிய வீடியோவால் பலரும் காவல் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் #BlacklivesMatter என போராட்டங்கள் வெடித்தது. போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் வழக்கு தொடர்பாக விசாரணை முடிந்து தண்டனையும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அந்த வீடியோவை பதிவு செய்த இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு ஊடக உலகின் உயரிய கவுரவம் என கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிட்சர் விருது 1917ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊக்கமருந்து சோதனையில் சீனா வீராங்கனை :மீராபாய் சானுக்கு தங்கம் கிடைக்குமா?

Admin

குழந்தையின் சிகிச்சைக்காக பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை.!!

Admin

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்: புதுடெல்லியில் கண்டுபிடிப்பு!

Admin

சீக்கிரமே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் அதான் நல்லது: ஜோ பைடன் பேச்சு

Admin

ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி

Admin

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு .. 3 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்திய பிரதமர்

Admin

ஆப்கானில் ஓசாமாவை அழிப்பதே எங்கள் வேலை .. என்னோடு இந்த போர் முடியட்டும்: அமெரிக்க அதிபர் ஜோபைடன்

Admin

மாஸ்க் போடாத பிரதமருக்கு அபராதம்! – தாய்லாந்தில் சம்பவம்

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

நடுக்கடலில் விமானத்தை தரையிறக்கிய விமானிகள்.. காரணம் என்ன?

Admin

ஆப்கானிஸ்தானில் ஜாலியாக ராட்டினம் ஆடி மகிழும் தாலிபான்கள்

Admin

Leave a Comment